‛‛கோவில்களில் உழவார பணி’’.. அறநிலையத்துறை இணை ஆணையரிடம் விண்ணப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை இணை கமிஷனரை அணுகி, விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பழமையான, பாரம்பரியம் மிக்க கோவில்களில் பொதுமக்கள் தூய்மை பணிளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை உழவாரப்பணி என்பார்கள்.

இந்நிலையில் தான் பழமையான, பாரம்பரியமிக்க கோவில்களில் துாய்மைப் பணிகளில் பொது மக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள சில இடங்களில் அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கோவில்களில் உழவாரப்பணிக்கு அனுமதி மறுப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ம.கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டது வந்தது.
இந்த விசாரணையின்போது கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள, பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை இணை கமிஷனரை அணுகி, விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உழவார பணி தொடர்பான அந்த விண்ணப்பங்களை, ஏழு நாட்களுக்குள் பரிசீலித்து, விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பக்தர்கள் கோவில் வளாகம், குளங்களை சுத்தம் செய்து, அங்கு வளர்ந்திருக்கும் செடிகளை அகற்றி, கோவில் வாயில்கள், கதவுகளுக்கு வர்ணம் பூசலாம். ஆனால், கோவில்களை புதுப்பிக்கவோ அல்லது புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். கோவிலை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை அறநிலையத்துறை எடுக்க வேண்டும். கட்டமைப்பை அவ்வப்போது ஆய்வு செய்து, நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள், பழமையான சைவ கோவில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளை கண்காணிக்க, அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட மாவட்ட குழு, கோவில்களின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications