பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனுக்காக பதிவு.. ஸ்டாலினையே சரமாரியாக விமர்சிக்கும் திமுகவினர்
சென்னை: இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய ஆர்கே ராதாகிருஷ்ணன் அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து Faceless People எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன் என்று நீண்ட பதிவினை திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த திமுகவினர் பலர், அவரையே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.. உங்க அளவு உடன்பிறப்புகளை செருப்பாலடிக்க யாராலும் முடியாது. தோல்வி குறித்து ஆராயனும்னா உங்க கிட்ட ஆரம்பிங்க. ராதாகிருஷ்ணனை கூட வெச்சிகிட்டே வெளில தோல்விக்கான காரணத்தை தேடிட்டு இருக்கீங்க என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருந்த பதிவில், "இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
திராவிட ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த பதிவினை பார்த்த திமுகவினர் பலர் திமுக தலைவர் ஸ்டாலினையே கடுமையான மொழியில் விமர்சித்து வருகிறார்கள்.. ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், " உங்க அளவு உடன்பிறப்புகளை செருப்பாலடிக்க யாராலும் முடியாது. தோல்வி குறித்து ஆராயனும்னா உங்க கிட்ட ஆரம்பிங்க. விஷப்பாம்பான ராதாகிருஷ்ணனை கூட வெச்சிகிட்டே வெளில தோல்விக்கான காரணத்தை தேடிட்டு இருக்கீங்க." என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
4 மில்லியன் பாலோவர்ஸ் உங்களுக்கு .. எதை ப்ரோமோட் பண்றதுனு இல்லையா? இந்த ஆள் இது வரை என்ன செஞ்சு இருக்கான்னு தெரியாம ..... கொஞ்சமாச்சும் கட்சி ஆதரவாளர்கள் என்ன நினைக்கிறாங்க னு புரிஞ்சுக்கோங்க .. என்று இன்னொரு திமுக ஆதரவாளர் பதிவிட்டுள்ளார்.
மூன்றாவதாக ஒரு திமுக ஆதரவு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "திமுகவின் தோல்வியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களில் மிக முக்கியமானவர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்..இது உங்களுக்கு புரியவில்லையா அல்லது வேறு வழியில்லாமல் நட்பை தொடர்கிறீர்களா?" என்று கேட்டுள்ளார்.
நான்காவதாக ஒரு திமுக ஆதரவாளர் வெளியிட்ட பதிவில், இந்த ஆர்கே ராதாகிருஷ்ணன் தான் முக்கியான நேரத்துல #திமுக-விற்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்தார். பெரிய கேடுகெட்ட வேலையை பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் என்ற பெயரில் தவெக-விற்கு சாதகமாக இருந்தார். பெரிய தலைவர்கள் எல்லாம் துரோகிகள் மூலமாகவே வீழ்வார்கள் என்ற கருத்தை கடுமையான மொழியில் கூறியிருந்தார். பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் தான் திமுக அதிமுக கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க போவதாக தகவல் என்ற பெயரில் மே முதல் வாரத்தில் வீடியோ வெளியிட்டார். அதன்பிறகு திமுக அதிமுக கூட்டணி குறித்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது என்பது திமுகவினரின் கருத்தாக உள்ளது. அவரது ஆவணப்படத்தை விளம்பரப்படுத்தியதற்காக திமுகவினரே ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications