பெண் எஸ்.பி பாலியல் புகார்: 'வெலவெல' நிலையில் டிஜிபி ராஜேஷ் தாஸ்.. தனி அறையில் விசாரணை
சென்னை: பெண் எஸ்.பி. பாலியல் புகாரின் அடிப்படையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.
தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் மீது ஒரு எஸ்.பி.யே பாலியல் புகார் அளித்ததால், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பெண் எஸ்.பி. அளித்த புகாரை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் திவீரமாக கண்காணிக்கும் என்றும், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முன்னரே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, "குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், "சிறப்பு டி.ஜி.பி. மீது புகார் கொடுக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என்பதற்காக எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் 16 ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதற்காக காலையிலேயே சிபிசிஐடி அலுவகம் வந்த அதிகாரி ராஜேஷ் தாஸ், கொஞ்சம் கூட இங்கும், அங்கும் திரும்பாமல் விறுவிறுவென அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்.
அங்கு தனி அறையில், அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications