சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"உள்துறை அமைச்சக அறிக்கையில் கோவை பற்றி தகவல் இல்லை" அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை.. காவல்துறை பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறை மீது அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்ஐஏ மாற்றி பரிந்துரை செய்தது. இதன்பின்னர் வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முன்பே எச்சரித்ததாகவும், தமிழக காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வழக்கை என்ஐஏ விசாரணைக்கு தாமதமாக மாற்றியதாகவும் விமர்சித்திருந்தார்.

உளறிகொண்டே இருக்காதீங்க.. இந்துத்துவா பிரசாகராக மாறிய ஆளுநர் ஆர்என் ரவி.. வைகோவுக்கு வந்ததே கோபம் உளறிகொண்டே இருக்காதீங்க.. இந்துத்துவா பிரசாகராக மாறிய ஆளுநர் ஆர்என் ரவி.. வைகோவுக்கு வந்ததே கோபம்

காவல்துறை பதிலடி

காவல்துறை பதிலடி

இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்

நடைமுறை என்ன?

நடைமுறை என்ன?

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கை தாமதமாக என்ஐஏவிற்கு அனுப்பியதாக கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டலோ அல்லது என்ஐஏ சட்டம், 2008ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப்பிரிவு 6ன் படி வழக்கு பதிவு செய்யப் பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதான் சட்டம்

இதுதான் சட்டம்

அந்த அறிக்கையைப் பெற்றவுடன் மாநில அரசு, மத்திய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மத்திய அரசு 15 தினங்களுக்குள் வழக்கின் தன்மைக்கு ஏற்ப என்ஐஏ விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.

என்ஐஏ விசாரணை

என்ஐஏ விசாரணை

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, மத்திய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் , சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன் வந்து என்ஐஏ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்ஐஏ விசாரிக்க பரிந்துரை செய்தார்.

எங்கே தாமதம்?

எங்கே தாமதம்?

இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட வழக்குகள் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.

கோவை பற்றிய தகவல் இல்லை

கோவை பற்றிய தகவல் இல்லை

ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.

வழக்கமான சுற்றறிக்கை

வழக்கமான சுற்றறிக்கை

18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து , வீடுகளை சோதனையிட்டு , வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும்.

களங்கம் விளைவிக்க வேண்டாம்

களங்கம் விளைவிக்க வேண்டாம்

எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DGP Shailendra Babu has responded to Annamalai's allegations against the Tamil Nadu police in the Coimbatore car blast case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X