கண்கள் உன்னை தேடுது மானே.. இளமை திரும்புதே பாடல் பாடிய தனுஷ்.. ஐஸ்வர்யா வெட்கம்.. குழந்தைகள் குதூகலம்
சென்னை: "இளமை திரும்புதே" பாடலை தனது மனைவி ஐஸ்வர்யாவிடம் பாடி மகிழ்ந்த தனுஷின் பழைய வீடியோ தீயாய் பரவி வருகிறது. இதை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
இயக்குநர் ஏஎல் விஜய்- அமலா பால், நாக சைதன்யா- சமந்தா விவாகரத்திற்கு பின்னர் பெரிதும் பேசப்படுவது தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவுதான். தனுஷ் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் பெரும் அப்செட்டில் உள்ளனர்.
18 ஆண்டுகள் கழித்து இந்த பிரிவினை தேவைதானா என்றும் விவாதித்து வருகிறார்கள். இன்று நீதிமன்ற வாயில்களில் எத்தனையோ பேர் பலவித காரணங்களுக்காக கோர்ட் வாசலில் போய் விவகாரத்திற்காக நிற்கிறார்கள்.

ஐஸ்வர்யா
ஆனாலும் சினிமா வட்டாரத்தில் டைவர்ஸ் என்றால் அது ரசிகர்களை பெரிதும் பாதிக்கிறது. தனுஷ்- ஐஸ்வர்யா ஆகியோர் ஆதர்ஷ தம்பதியாகவே வலம் வந்தனர். இந்த நிலையில் இருவரும் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இருவரது முதல் சந்திப்பு குறித்த பழைய கதைகளையும் ரசிகர்கள் அசை போட்டு வருகிறார்கள்.

தேசிய விருது
அத்துடன் கர்ணன் படத்திற்கு தேசிய விருது பெற்ற தனது கணவனின் புகைப்படத்தையும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தனது தந்தையின் புகைப்படத்தையும் விருதுகளுடன் பதிவிட்ட ஐஸ்வர்யா, இதுகுறித்து #prouddaughter, #proudwife என பெருமிதம் பொங்க போஸ்ட் போட்டிருந்தார்.

பார்ட்டி
இப்படி அன்னியோன்யமாக இருக்கும் இவர்களுக்குள் என்ன பிரச்சினை வந்துவிட்டது என ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஜோடியின் இன்னொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தங்கள் அபார்ட்மென்ட் மொட்டை மாடியில் ஒரு சிறிய பார்ட்டி நடக்கிறது.

பேட்ட பாடல்
அங்கு குழந்தைகள் லிங்கா, யாத்ரா என இருக்கிறார்கள். அவர்களுடன் இன்னும் சில சிறுவர்களும் இருக்கிறார்கள். அப்போது தனுஷ் மைக்கை பிடித்தபடி
"மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே.........
என டான்ஸ் ஆடியபடியே இளமை திரும்புதே என ரஜினிகாந்த் பேட்ட படத்தில் பாடிய பாடலை பாடியபடியே தனுஷ் நகர, சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா ரசித்தபடியே நிற்கிறார். இவர் அருகே வந்ததும் வெட்கத்தால் கண்களை கைகளால் மறைக்கிறார். இப்படியாக இவர்களது அன்பு இந்த பழைய வீடியோவில் மிளிர்கிறது. இதை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications