“நான் இருக்கேன்மா..” கதறி அழுத ரோபோ சங்கரின் மகளை தேற்றிய தனுஷ்!
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், நேற்று சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரைக்கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் விஜய் டிவி செட்டில் ரோபோ சங்கர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது மருத்துவ நிலைமை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ரோபோ சங்கர், செப். 16 அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது. மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்சனைகள் இருந்தன. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் மருத்துவர்கள் தொடர்ந்த சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை. செப் 18 அன்று இரவு 9.05 மணிக்கு உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோபோ சங்கரின் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இவரை தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். குறிப்பாக தனுஷ் அஞ்சலி செலுத்த வந்தபோது, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தனுஷின் தோள் மீது சாய்ந்து கதறி அழுதார். "நான் இருக்கேன்மா பார்த்துக்கொள்கிறேன்" என்று தனுஷ் இந்திரஜா சங்கருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications