"கேப்டன் மில்லருக்கு குடம் குடமாக பீர்.." தனுஷ் கட் அவுட்டிற்கு பீர் அபிஷேகம்.. அடுத்து என்னாச்சு
சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அங்கே தனுஷ் கட்அவுட்டிற்கு அவரது ரசிகர்களை பீரை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர்,
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா என்பது ரொம்பவே முக்கியமானது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

வழக்கமாகப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் தான் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடுவார்கள். இந்தாண்டு திங்கள்கிழமை பொங்கல் விழா வரும் நிலையில், இன்றே பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
பொங்கல்: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகும். இது நீண்ட விடுமுறைக் காலம் என்பதால் உச்ச நடிகர்களின் படங்கள் எல்லாம் பொங்கல் விழாவுக்கு வெளியாகும்.. அதன்படி இந்தாண்டும் பல்வேறு பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படங்கள் வெளியாகிறது. அதேபோல விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியானது. புதுச்சேரியில் நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டது..

கேப்டன் மில்லர்: பொதுவாகப் பெரிய பெரிய நடிகர்கள் நடிப்பில் படங்கள் வெளியாகும் போது நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வார்கள். ஆனால், புதுச்சேரியில் உள்ள தனுஷ் ரசிகர்கள் அதையெல்லாம் தாண்டி சென்றுவிட்டனர். அவர்கள் தனுஷ் கட்அவுட்டிற்கு பீர் அபிஷேகமும் செய்தனர்.. பூ தூவி, பூசனிக்காய், 108 தேங்காய்கள் உடைத்து தனுஷ் படத்தைக் கொண்டாடினர்,
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையில் சென்ற பொது மக்களுக்கும் தனுஷ் ரசிகர்கள் கரும்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.. மேலும், தனுஷ் பெண் ரசிகர்கள் சாலையில் இறங்கி நடனமாடினர், இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications