நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த தனுஷ் பட நடிகைகளை விடுங்க! இந்த நடிகர் சொல்வதை கேளுங்க!
சென்னை: தனுஷ் குறித்து நயன்தாரா காட்டமாக அறிக்கை விட்டிருந்த நிலையில் அந்த அறிக்கையில் பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதிலும் தனுஷுடன் நடித்த நடிகைகளே அவருக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனுஷுடன் நடித்த கார்த்திக்குமாரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் அவரது திருமணம் வரை இருக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகியுள்ளது. இதற்கு நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.இதற்கான டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பிடிஎஸ் (Behind the scene) காட்சிகள் வெளியாகியிருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் தனுஷ் ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு நயன்தாரா தனது இன்ஸ்டாவில் ஒரு காட்டமான அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் தனுஷின் பிம்பத்தை சிதைப்பது போல் பேசியுள்ளார்.
மேலும் பொதுவெளியில் போல் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராக இருங்கள், உங்களை போல் சினிமா பின்னணியில் நான் வந்தவள் இல்லை என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தான் சுயம்பாக இந்த இடத்திற்கு வந்தவள் என்றும் தனுஷ் தனது தந்தை, அண்ணனின் ஆதரவால் இந்த இடத்தை பிடித்தார் என்றும் மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கான உரிய பதிலை தனுஷ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷுடன் நடித்த அனுபமா, பார்வதி நாயர், நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த கார்த்திக் குமாரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாவில் நயன்தாராவின் அறிக்கையை பதிவிட்டு கடினமான சூழலில் தைரியமாக செயல்பட்ட நயன்தாரா என கார்த்திக் குமார் குறிப்பிட்டுள்ளார். நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் பட ஷூட்டிங்கின் போது காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இரு ஆண்டுகள் கழித்து இந்த திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் நயன்தாரா காட்டப்பட்டுள்ளார். நயன்தாரா குறித்து நடிகை ராதிகா, நாகார்ஜுனா, அட்லி உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். இந்த டாக்குமென்ட்ரியில் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற தங்கமே உன்னை தான் என்ற பாடலின் வரிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அது போல் அந்த படத்தின் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருக்கும் 3 வினாடி காட்சி அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்துதான் தனுஷ் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications