Dhanush: அரசியல் களத்திற்கு ரெடியாகும் தனுஷ்? சென்னை ஓஎம்ஆரில் நாளை நடக்கும் முக்கிய மீட்டிங்.. பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னை ஓஎம்ஆரில் தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை தனுஷ் நேரில் சந்திக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தனுஷ் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் விரைவில் அரசியல் களத்தில் கால் பதிக்க இருப்பதாக தெரிகிறது. தனுஷின் செயல்பாடுகளும் அதைநோக்கியே செல்வதை பார்க்க முடிகிறது.

Dhanush getting ready for the political arena key meeting is set to take place tomorrow on Chennai

நிர்வாகிகளை சந்திக்கும் தனுஷ்

சமீபத்தில் தனது பிறந்த நாளை ஒட்டி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருந்தார். அதன்பிறகு தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ், தனது நற்பணி மன்றங்களுக்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அரசியல் கட்சிக்கு முன்னோட்டமாகவே தனுஷ் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா?

இதற்கிடையே, நடிகர் தனுஷ், தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை நாளை நேரில் சந்திக்க உள்ளார். சென்னை ஒ.எம்.ஆரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு பரிசும், மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனுஷ் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தனுஷ் அரசியல் பிரவேசத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரக்கூடிய நிலையில், ஆளும் தவெக தரப்பில் இருந்து கடும் விமர்சனங்களை தற்போதே வைக்க தொடங்கியுள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் உள்ளிட்டோர் தனுஷ் அரசியலுக்குவ் வந்தால் எந்த பாதிப்பும் இல்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தனர். அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் நாளை பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

100 சதவீதம் அரசியலுக்கு வருவார்

நடிகர் தனுஷ், தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாகவும், கட்சியை பதிவு செய்வதற்கான பணிகளில் அவரது தரப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்பது பற்றி அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. அதேநேரத்தில் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்ட போது, தனுஷ் மறுக்கவும் இல்லை.

சிரித்துக்கொண்டே சென்றாரே தவிர, அரசியல் வருகை என்ற தகவலை மறுக்கவில்லை. எனவே, தனுஷ் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் நிச்சயம் என்று அவரது ரசிகர்கள் அடித்து சொல்கிறார்கள். இந்த சூழலில்தான் நாளை தனுஷ் நடத்தும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. நாளை நிகழ்ச்சி நடைபெற உள்ள தனியார் கல்லூரியும் தவெக அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடையது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+