“நீங்க அனுப்புன பணம்..” - நடிகர் தனுஷுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன போண்டா மணி!
சென்னை : சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் செய்த இந்த உதவிக்கு நன்றி கூறி போண்டா மணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போண்டாமணிக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என அவரது நண்பரும் நடிகருமான பெஞ்சமின் வீடியோ வெளியிட்டு இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பல திரையுலக நட்சத்திரங்கள் உதவி வருகின்றனர்.

தீவிர சிகிச்சையில் போண்டாமணி
நகைச்சுவை நடிகர் போண்டாமணி அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மேல் சிகிச்சைக்கு உதவும்படியும் கோரி நடிகர் பெஞ்சமின் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டன. அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

உருக்கமான வீடியோ
மேலும், இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் நுழைந்தவர் போண்டா மணி. தனியாகவே இந்தியாவுக்கு வந்தார், அவர் தனியாக குழந்தைகளை விட்டுவிட்டு போய்விடக்கூடாது. நம்மால் முடிந்தவரை அவருக்கு உதவ வேண்டும" என்று கண்ணீர்மல்க பேசியிருந்தார் பெஞ்சமின். இந்த வீடியோ தீயாகப் பரவியதை அடுத்து நடிகர் போண்டா மணிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

குவியும் உதவிகள்
இதையடுத்து நடிகர் போண்டாமணியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போண்டா மணியின் மருத்துவச் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் கொடுத்து உதவி இருந்தார். அந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம் என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார் போண்டா மணி. மேலும் வடிவேலு தன்னிடம் பேசியதில் தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் கூறினார். வடிவேலு தன்னால் இயன்ற உதவியைச் செய்வேன் என்றும் உறுதியளித்தார்.

தனுஷ் உதவி கண்ணீர் மல்க நன்றி
இந்நிலையில் நடிகர் தனுஷ், நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். தனுஷ் அனுப்பிய பணம் தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாக கூறி அவருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார் போண்டா மணி. ரசிகர்கள் தனுஷின் இந்தச் செயலை பாராட்டி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications