தோளுக்கு மேல் வளர்ந்த பையன்கள் இருக்க.. மிருணாள் தாக்கூருடன் காதலில் தனுஷ்? உண்மையை உடைச்சுட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த நடிகர் தனுஷ் மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் வந்திருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த பிறகு பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் தற்போது நடிகை மிருணாள் தாக்கூருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், தனுஷ் உடனான காதல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் மிருணாள் தாக்கூர்.

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற முடியும். பல முன்னணி நாயகர்களின் வாரிசுகள் திறமையின்மையால் காணாமல் போயிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் ஏராளமான நடிகர்களை சொல்லலாம்.

அதே நேரத்தில் தந்தை, அண்ணன் மூலம் சினிமாவுக்கு வந்தாலும் நிலைத்து நிற்பவர்கள் ஒரு சிலர்தான். விஜய், சூர்யா என குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் வாரிசுகளாக அறிமுகமானாலும் திறமையால் சினிமாவில் ஜெயித்தவர்கள். அப்படி திறமையால் ஜெயித்தவர் தான் நடிகர் தனுஷ்.

Dhanush Love Rumour Mrunal Thakur

நடிகர் தனுஷ்

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் வாரிசு, இயக்குனர் செல்வராகவனின் தம்பி என்று அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தாலும், அதற்கு பிறகு கடுமையாக போராடி முன்னணி நாயகனாக உயர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் நடித்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில், திடீரென கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். இது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மிருணாள் தாக்கூர்

மேலும், இயக்கத்திலும் மிக ஆர்வமாக இருக்கும் தனுஷ் இயக்கம், நடிப்பு என இரு குதிரைகளில் பயணித்து வருகிறார். தனுஷின் திரைப்பட நிகழ்வுகளில் அவரது இரு மகன்களும் கலந்து கொண்டு வருகின்றனர். பார்ப்பதற்கு தனுஷ் போலவே இரு மகன்களும் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதற்கிடையே நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்தி வரும் போது அதில் தனுஷ் பெயரும் அடிபடுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் வேறு சில நடிகைகள் உடனும் தனுஷ் காதலில் இருப்பதாக அவ்வப்போது வதந்தி கிளம்புவது வழக்கம் தான்.

காதல் வதந்தி

அப்படித்தான் தற்போது ஒரு காதல் விவகாரம் தனுஷை குறி வைத்து பரவி வருகிறது. சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற மிருணாள் தாக்கூருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் சன் ஆப் சர்தார் 2 உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நிகழ்ச்சிகளில் தனுஷும் மிருணாள் தாக்கூரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் காதல் உறவில் இருப்பது உண்மைதான் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதான நிலையில் தற்போது இது குறித்த தகவலுக்கு மிருணாள் தாக்கூரே விளக்கம் அளித்திருக்கிறார்.

தனுஷ் நல்ல நண்பர்

" தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான். சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவியது எனக்கு தெரியும். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு மட்டும் தான் வந்தது. அஜய் தேவ்கானும் தனுஷும் நல்ல நண்பர்கள். அஜய் தேவ்கான் அழைத்ததால்தான் அந்த நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டார். ஆனால் என்னை வைத்து ஏன் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை" எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் தனுஷ் மிருணாள் தாக்கூர் இடையேயான காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+