2031-ல் விஜய் vs தனுஷ்? 2வது இடத்தை நோக்கி சுழலும் போயஸ் கார்டன் அரசியல்! ஜோதிடர் அதிரடி கணிப்பு
சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் திரண்ட நிகழ்வில், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்தும், 2031ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ரசிகர்கள் எழுப்பிய குரல், கோடம்பாக்கத்தையும் கடந்து புனித ஜார்ஜ் கோட்டை வரை எதிரொலிக் தொடங்கியுள்ளது. "தலைவா, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்!" என்ற குரல் கோடம்பாக்கத்தையும் தாண்டி, போயஸ் கார்டன் வாசலில் ஒலிக்க துவங்கி உள்ளது.. என்ன காரணம்?
நம்முடைய தமிழக அரசியல் களம் எப்போதுமே சினிமாத்துறை பிரபலங்களின் வருகையாலும், அவர்களின் அரசியல் நகர்வுகளாலும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் விஜயகாந்த், கமல், ஆரம்பித்து விஜய் வரை திரை நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் தமிழக மக்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது... அந்த வரிசையில் இப்போது நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த விவாதங்களும் முளைத்துள்ளன.
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் திரண்ட நிகழ்வில், தனுஷின் அரசியல் எதிர்காலம் குறித்தும், 2031ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ரசிகர்கள் எழுப்பிய குரல், கோடம்பாக்கத்தையும் கடந்து புனித ஜார்ஜ் கோட்டை வரை எதிரொலிக் தொடங்கியுள்ளது.
2031-ல் முதல்வர் - அதிரடி காட்டிய ரசிகர்
போயஸ் கார்டன் வாசலில் திரண்டிருந்த ரசிகர்கள் ஊடகங்களிடம் பேசியபோது, "சென்னை: "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சினிமாத்துறையை சேர்ந்தவர் வந்து என்ன செய்யப் போகிறார்? டான்ஸ் ஆடிவிட்டு போகப்போகிறாரா? என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் அந்த சினிமாத்துறையை சேர்ந்தவர்தான் நாட்டையே ஆளப்போகிறார். அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்... 2031ம் ஆண்டில் முதலமைச்சராவார், நாங்கள் அவரை முதலமைச்சராக்குவோம். தலைவா, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்..
அவர் இதுவரை தனது அரசியல் வருகை குறித்து எதுவுமே அறிவிக்கவில்லை. அதற்குள்ளாகவே உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது? "இவர் வந்துவிடுவாரோ" என்ற பயம் ஏன் வருகிறழத? இத்தனை வருடங்களாக தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய 2 முக்கிய கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
தமிழக அரசியலில் 2வது இடம்
இப்போது எங்கள் தலைவர் விருப்பம் தெரிவித்து அரசியலுக்கு வந்தால், அந்தப் பாரம்பரிய நிலை மாறும். எதிர்கால அரசியல் சூழலே முற்றிலும் மாறுபடும்... தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எங்கள் தலைவருக்கும் இடையிலான போட்டியாகவே அது அமையும்.
முடிவுகள் எல்லாமே தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளன. விஜய்யாக இருந்தாலும் சரி, அவர் முயற்சியை மட்டுமே செய்ய முடியும், கடைசியில் மக்களே தீர்ப்பு வழங்க வேண்டும். எங்கள் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்.. அவர் வந்தால் அவருக்காகக் களத்தில் இறங்கிப் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆரம்பத்தில் அவரது நிலையும், இப்போது அவர் அடைந்துள்ள உயரமும் வேறுபட்டவை. 2 முறை தேசிய விருது வெல்வது சாதாரண விஷயம் கிடையாது.. இறைவனின் அருளால் மட்டுமே அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது" என்று நெகிழ்ந்து கூறுகிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.
ஜோதிடர் சொன்னது என்ன?
ரசிகர்களின் ஆவேச குரல் இப்படி ஒலித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் வெளியிட்ட கணிப்பு இந்த விவாதத்திற்கு இன்னும் கூடுதல் எண்ணெயை ஊற்றியிருக்கிறது.
தனுஷின் ஜாதகத்தை நேரடியாக ஆய்வு செய்திருப்பதாக சொல்லும் ஜோதிடர், தனுஷின் ஜாதகத்தில் அரசியலில் பிரகாசிப்பதற்கான உன்னதமான யோகம் வலுவாக உள்ளதாக உறுதியாக கூறுகிறார்,
வரவிருக்கும் தேர்தல்களில் நடிகர் விஜயின் அரசியல் வருகையை எதிர்கொள்ளப் பிரதான கட்சிகள் யோசித்து வரும்போது, தனுஷ் அரசியலுக்குள் காலடி வைத்தால் தமிழக அரசியலின் பிரதான எதிர்க்கட்சி இடமான 2வது இடத்தை மிக எளிதாக பிடித்துவிடுவார் என்றும், எதிர்காலத் தமிழக அரசியல் களம் என்பது "விஜய் vs தனுஷ்" என்ற நேரடிப் போட்டியாக மாறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் ஜோதிடர் கணித்துள்ளார்.
ஜோதிடர் இப்படி சொன்ன விஷயம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தனுஷின் பெயரும் ரசிகர்களால் ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது.
நலத்திட்ட உதவிகள்
நடிகர் தனுஷ் வெறும் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்துக் கடந்துசெல்பவர் கிடையாது.. அசுரன், கர்ணன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நில உரிமை, சாதிய ஒடுக்குமுறைகள், அதிகார வர்க்கத்தின் வன்முறை என்று சமூக அரசியல் தளங்களை பேசியிருக்கிறார்..
"எண்ணம்போல் வாழ்க்கை" என்று தனுஷ் சொன்ன எளிமையான வரிகள் தொடங்கி, "நாங்கள் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?" என்று மேடையில் அவர் கேட்ட கேள்வி வரை எல்லாமே பெரிய அளவில் கவனம் பெற்றவை தான்.
போதாக்குறைக்கு, தனுஷ் ரசிகர்கள் சில இடங்களில் அறிமுகப்படுத்திய புதிய கொடியும், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அவர்கள் நடத்தி வரும் அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் "தனுஷ் நிஜ அரசியலுக்கும் அஸ்திவாரம் போடுகிறாரா?" என்ற கேள்வியை ஆழமாகவே எழுப்பிவிட்டுள்ளன.
போயஸ் கார்டனில் தலைவா கோஷம்
அவரது பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பு என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் திரண்ட ரசிகர்கள் எழுப்பிய "தலைவா" என்ற கோஷமும், அவர்கள் ஒட்டிய போஸ்டர்களும் அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்க்காமல் இல்லை.
ஒரு காலத்தில் போயஸ் கார்டன் என்றாலே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடும், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும்..
ஆனால், அதே போயஸ் கார்டனில் தன் சொந்த உழைப்பால் புதிய வீடு கட்டி, அங்கிருந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷை நோக்கி இப்போது எழும்பியிருக்கும் அரசியல் குரல்கள், கோடம்பாக்கத்தைத் தாண்டித் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளன.. ஆனால், தனுஷின் முடிவு என்னவென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!


Click it and Unblock the Notifications
