தனுஷ் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்ச் ! விலை என்ன தெரியுமா? ஒரு சொகுசு காரே வாங்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் பங்கேற்க வந்த நடிகர் தனுஷ் தனது கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் குறித்தும் அதன் விலை குறித்து வெளியான தகவல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் தலைப்புச் செய்தியாக மீண்டும் மாறி இருக்கிறார் தனுஷ். அவர் மீது நயன்தாரா 'நானும் ரவுடிதான்' படத்தின் சிறு காட்சிகளை தனது திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். படம் தொடர்பான உரிமை தயாரிப்பாளரான தனுஷிடம்தான் இருக்கிறது. ஆகவே, அவர் அனுமதி பெறாமல் காட்சிகளைப் பயன்படுத்த முடியாது என்பதே காப்புரிமைச் சட்டப்படி சரியானது என்றும் சிலர் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

dhanush nayanthara

ஆனால், படக் காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக மட்டும் அல்லாமல் நயன் தனிப்பட்ட வகையில் தனுஷ் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். மற்றவர்களின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றும் சர்ச்சைக்கு தொடர்பில்லாத சில கருத்துகளை அவர் பேசி இருந்தார். ஆனால், வழக்கம்போல் தனுஷ் இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளிக்கவே இல்லை. எப்போதும் போல அவர் அமைதியாக இருந்து வருகிறார். நயன்தாரா குறிப்பிட்டதைப் போல ஏதேனும் ஒரு இசை வெளியீட்டு விழாவில் அவர் பதிலளிக்கலாம்.

இதனிடையே தான் இந்தச் சர்ச்சைக்குப் பின்னர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக நயன்தாரா அதில் பங்கேற்றார். முன்வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதே வரிசையில் தனுஷூக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை எனச் செய்திகள் அதைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தின.

அந்த விழாவில் பல ஆண்டுகள் பின்னர் தனுஷூம் சிம்புவும் சந்தித்துக் கட்டி அணைத்துக்கொண்ட காட்சிகள் அதிக கவனத்தைப் பெற்றன. ஆகாஷ் பாஸ்கரன் 'நானும் ரவுடிதான்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவர் இப்போது தனுஷ் நடக்கும் 'இட்லி கடை'படத்தைத் தயாரித்து வருகிறார். இளம் தயாரிப்பாளராக அறிமுகமான அவருக்கு திரைத்துறையில் இவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது என்பது இந்த மணவிழாவுக்குப் பின்பே பலருக்கும் தெரியவந்தது.

இந்நிலையில்தான் நயனும் தனுஷூம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருந்தது. அதேபோல் சிம்புவும் தனுஷூம் நெருக்கம் காட்டியது என இந்த முக்கிய செய்திகளைத் தாண்டி தனுஷ் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் மீது கவனம் பதித்துள்ளது. அவர் கட்டி இருந்த வாட்ச் விலை என்ன இருக்கும்? அதன் மதிப்பு என்ன? என்று பலரும் சமூக ஊடகங்களில் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பின்படி தனுஷ் கையில் அணிந்திருந்த Rolex Day-Date 40 watch விலை ஒரு சொகுசு காரின் விலைக்கு ஈடானது என்றும் அந்த வாட்ச் வாங்கி பணத்தை வைத்து மும்பையில் ஒரு 2BHK பிளாட் வாங்கிவிடலாம் என்றும் தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு ஆடம்பரமான கடிகாரத்தைத்தான் ஆகாஷ் பாஸ்கரன் மணவிழாவுக்கு தனுஷ் அணிந்து வந்துள்ளார்.

dhanush nayanthara

பலரது கண்களைக் கவர்ந்துள்ள இந்தக் கடிகாரத்தின் சிறப்புதான் என்ன? ரோலக்ஸ் டே-டேட் கடிகாரம் என்பதே ஒரு ஆடம்பரமான வாட்ச். அதை மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே கட்டக்கூடியது. இது அரேபிய எண்களால் அலங்கரிக்கப்பட்டது. கூடவே ஆலிவ்- க்ரீன் டயல் உள்ளது. மேலும் ஜொலிக்கும் பிளாட்டினம் தோற்றதைக் கொண்டுள்ளது. தனுஷ் அணிந்திருந்தது Rolex signature fluted bezel மாடல் கடிகாரம். இது தனித்தன்மை மிக்க கடிகாரம்.

அந்தக் கதை எல்லாம் இருக்கட்டும். அதன் விலை என்ன என்பதைப் பார்ப்போம். அதுதான் ஆர்வத்தைக் கிளப்பும் செய்தியாக உள்ளது. இதன் விலை 160,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,35,09,000 ஆகும். சரியாகச் சொன்னால் ரூ. 1.35 கோடி வரை வரும். இது வெறும் மணி பார்க்கும் கடிகாரம் அல்ல. உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அடையாள சின்னமாகக் கருதப்படுகிறது.

நயன்தாரா தனது படத்தின் சிறிய காட்சிகளைப் பயன்படுத்தியதற்கு 10 கோடி கேட்டதாக அறிக்கைவிட்டிருந்த நிலையில், தனுஷ் தனது கையில் சுமார் 1.35 கோடிக்கு வாட்ச் கட்டி இருந்ததைக் கவனிக்க போது அவர் எந்தளவுக்கு ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதே விழாவுக்கு நயன்தாரா மிக எளிமையாக ஆடம்பரம் இல்லாமல் வந்திருந்தார் என்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டிக் கருத்திட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+