தவெகவில் 50 கோடி வாங்கிருக்கீங்க.. சத்யபாமாவை கேள்வியால் துளைத்த அதிமுகவினர்.. தாராபுரத்தில் பரபரப்பு
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக வேட்பாளர்கள் இருவரும், அதிமுகவில் இருந்து விலகி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் செல்லும் இடமெல்லாம் அவர்களுக்கு எதிர்ப்பு எழுகிறது. இந்நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் சென்ற தவெக வேட்பாளரை சுற்றி வளைத்த அதிமுகவினர், நீங்கள் 50 கோடி வாங்கி கொண்டு தான் சென்றுள்ளீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக தொண்டர்கள் அவரிடம், "நீங்கள் நல்லது செய்வீர்கள் என்பதற்காக தான் உங்களை ஒரு எம்எல்ஏவாக தேர்வு செய்தோம். எங்களுக்கு நீங்க என்ன செய்தீர்கள். ஒரு ரோடு கூட போடவில்லை. நீங்க வெற்றி பெற்ற சர்டிபிகெட் கொடுங்க. பசி, தூக்கம் தொலைச்சுட்டு வேலை பார்த்துருக்கோம். ஓட்டு போட்ட தொண்டன். அவ்வளவு ஆதங்கம் எங்களுக்கு இருக்கு. ஆட்சியில் இருந்தபோது கூட நீங்கள் எதுவும் செய்யவில்லை.

எவ்வளவு உழைத்தோம். கட்சி மாறுவதை, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதை யாரிடமாவது சொன்னீர்களா. நன்றி கூட சொல்லாமல் ஓடிவிட்டிர்கள். அம்மாவுக்காக தான் ஓட்டு போட்டோம். உங்களுக்கு அந்த நன்றிக்கடன் இருக்க வேண்டுமல்லவா. திமுகவை பற்றி நீங்கள் பேச வேண்டும். நாங்கள் ஓட்டு போட்டவர்கள். கேள்வி கேட்போம். அதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். நீங்கள் பணம் வாங்கிவிட்டு தான் போயுள்ளீர்கள்.
ரூ.50 கோடி பணம் வாங்கி சென்றுள்ளீர்கள். நான் சத்தியமாக சொல்கிறேன். நன்றி விசுவாசம் இருந்தால் நீங்கள் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. திமுக அதிமுக இணைந்து எடப்பாடி
முதலமைச்சராக முயற்சி செய்ததற்காக நீங்கள் ஆதாரம் கொடுங்கள். நீங்கள் எதுவும் கேட்க கூடாது. ஓட்டு போட்டு வேலை பார்த்தவர்கள் ஆதங்கத்தை கொட்டத்தான் செய்வோம்" என்று கூறினர்.
இதற்கு சத்யபாமா, "நான் எம்எல்ஏவாகி 3 மாதங்கள் தான் ஆனது. கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் இருந்த திமுகவிடம் கேளுங்க. நம் எதிரி திமுக என அம்மா சொன்னார். உங்களுக்கு திமுகவுடன் சேர்ந்து இருக்க தயாரா. நான் சத்தியம் செய்கிறேன். திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சித்தார். புதுச்சேரி ரிசார்டில் அவரே பேசினார் இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா.
என் பிள்ளைகள் மேல் சத்தியமாக வாங்கவில்லை. நானும் செலவு செய்துள்ளேன். நான் பணம் வாங்கியதற்கான ஆதாரத்தை கொடுங்கள். கிளப்பிவிடுவது போல் பேச கூடாது. தவறு செய்தவர்கள் இங்கு தைரியமாக நிற்க முடியாது. யாரிடமும் பணம் வாங்கவில்லை என்பதால் நான் இங்கு வந்துள்ளேன். நான் தான் எல்லாருக்கும் பணம் கொடுத்துள்ளேன். செலவு செய்துள்ளேன்" என்று பதில் அளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
