"இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீங்க" எம்ஜிஆர் சொல்லியும் கேட்காத மக்கள்! அதிமுக கோட்டையான தாராபுரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரத்தில் 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டாம் என எம்ஜிஆர் பிரச்சாரம் செய்த போதிலும் அந்த தொகுதியில் இரட்டை இலையில் போட்டியிட்ட வேட்பாளரே வென்றார். அந்தளவுக்கு தாராபுரத்தில் அதிமுக ஊறி போயிருக்கிறது என்கிறார்கள். என்னாது இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீங்கன்னு எம்ஜிஆரே கேட்டாரா? வாங்க பின்னணியை பார்க்கலாம்.

இதுகுறித்து பத்திரிகையாளர் தராசு ஷியாம், நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இதே தாராபுரத்தில் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தல், எம்ஜிஆர் கட்சி தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தல். தாராபுரம் வேட்பாளர் ஐய்யாசாமி என்பவரது பி படிவம் (வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவம்) கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பிய போது மாறிவிட்டது.

Dharapuram

அதிமுக வேட்பாளருக்கு பதில் சுயேச்சை

அதிமுக வேட்பாளருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு போய்விட்டது. அந்த வேட்பாளரும் அதிமுககாரர்தான். அதாவது இரட்டை இலை சின்னத்தில் எம்ஜிஆர், பெயர் முன்மொழியாத ஒரு வேட்பாளர். அலங்கியம் பாலகிருஷ்ணன் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் ஐய்யாசாமி மீது புகார்கள் எழுந்தன.

மாறப்பட்ட வேட்பாளர்

வேட்பாளர் மாற்றப்பட்டாலும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முதலில் வழங்கப்பட்ட ஐய்யாசாமியின் பி பார்ம் சான்றிதழை திரும்ப பெறவோ அல்லது ரத்து செய்யவோ தொழில்நுட்ப ரீதியாக முடியவில்லை. அதே சமயம் ஐய்யாசாமியும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.

பி பார்ம்

தேர்தல் விதிகளின் படி அதிமுகவின் அதிகாரப்பூர்வ பி பார்ம் சான்றிதழ் ஐய்யாசாமியிடம் இருந்ததால் தேர்தல் ஆணையம் அவரையே வேட்பாளராக அறிவித்து இரட்டை இலை சின்னத்தை அவருக்கு ஒதுக்கியது. இந்த நிலையில் எம்ஜிஆர் இரட்டை இலைக்கு எதிராக சிங்கம் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். எனினும் இரட்டை இலையில் போட்டியிட்ட ஐய்யாசாமிதான் வென்றார்.

தாராபுரத்தில் இரட்டை இலை

இந்த சம்பவத்தை எதற்காக சொல்கிறேன் என்றால், தாராபுரத்தில் இரட்டை இலை என்பது ஊன்றியிருக்கக் கூடிய ஒரு விஷயம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் விஜய் அரசியல் செய்வதாக பேசி வருகிறார். ஆனால் 1988 ஆம் ஆண்டு ஜானகி அணிக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலை வந்த போது ஆர்.எம்.வீரப்பன், கருணாநிதியை அவருடைய வீட்டிற்கே போய் சந்தித்து ஆதரவு கேட்டார். அதாவது அதிமுக ஆட்சி தொடர திமுகவின் ஆதரவை கேட்டார்.

திமுக - அதிமுக இடையே உறவு

எனவே திமுக- அதிமுக இடையேயான உறவு என்பதெல்லாம் ரொம்ப பழைய விஷயம். இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரியுமா என எனக்கு தெரியவில்லை. எனவே விஜய் சொல்வதெல்லாம் வாக்காளர்கள் மத்தியில் பெரிய உணர்வை எல்லாம் ஏற்படுத்தாது. முதல்வரின் பேச்சு பொழுதுப்போக்காக இருந்தது. கட்சியினருக்கு பிடிக்கும்.

கேரவன் செட் அப்

இந்த கேரவன் செட்அப்பில் கூட்டணி கட்சியினரை தவெகவினர் ஏற்றுவதே இல்லை. கூட்டணி கட்சியினரின் உள்ளூர் நிர்வாகிகளின் பெயர்களை கூட முதல்வர் சொல்லவில்லை. கூட்டணி கட்சியினரும் ஓட்டு கேட்க செல்லவே இல்லை.

விஜய் பேச்சு

விஜய் பேச்சுக்காகவே ஓட்டு கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சை கேட்டு அந்த கொள்கை, கருத்துகள், சித்தாந்தங்கள் வழியாக ஈர்க்கப்பட்டு ஓட்டை மாற்றி போட்ட காலம் உண்டு.

வேட்பாளர் வெற்றி

ஒரு வேட்பாளரை வெற்றி பெற வைப்பதோ தோல்வி அடைய வைப்பதோ கடைகோடியில் இருக்கும் வாக்காளர்கள்தான். வாக்குப்பதிவின் போதுதான் அவர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே தெரியும். நல்லதே நடக்கும் என விஜய் சொல்கிறார். தவெகவுக்கு நல்லது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+