5 வருஷத்துக்கு கூப்பு தானா? தவெகவை தடுமாற வைத்த தாராபுரம்! மிரண்ட அதிமுக மாஜிகள்! விஜய் ப்ளான் காலி?
சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே கணித்தபடி மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னணியில் இருக்கிறது. தாராபுரத்தில் நிலைமை சற்று சிரமம் தான் என கணிக்கப்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கையில் அந்த கணிப்புகள் உண்மைதான் என்பது தெரிகிறது. 1000 வாக்குகளுக்கு மேல் அதிமுக முன்னிலை வகிக்கும் நிலையில் சத்யபாமா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் 5 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என எண்ணியிருந்த விஜயபாஸ்கள் உள்ளிட்ட அதிமுக முன்னாள் மாஜிகளும், அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவலாம் என திட்டமிட்டிருந்த சிட்டிங் எம்.எல்.ஏ.க்களும் மிரண்டு போய் இருப்பதாக சொல்கின்றார்.

தமிழகத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டியில் உள்ளனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,23,306 வாக்காளர்களில் 1,79,214 பேர் வாக்களித்துள்ள நிலையில், மொத்தம் 80.25% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 320 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது
வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட 642 பேலட் யூனிட்கள், 321 கன்ட்ரோல் யூனிட்கள், 337 விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றனர். 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தாராபுரம் தொகுதியில் தவெக முன்னிலை வகித்தது. இதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகமடைந்தனர். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தமிழக வெற்றி கழகமே முன்னிலை வகித்ததால் அவர்களின் உற்சாகம் இருமடங்கானது. ஆனால் அடுத்த சுற்றில் அவர்களது கனவில் மண் விழுந்தது.
முதலில் வெறும் வெறும் 5 வாக்குகள் முன்னிலையில் இருந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்திபாமாவை விட, அதிமுக வேட்பாளர் பானுமதி சுமார் 5 வாக்குகள் முன்னிலை பெற்றார். அதற்கு பிறகு 600 என இருந்த வாக்கு வித்தியாசம் பின்னர் 1000 என மாறியது. இதனால் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்ற நிலையில் தற்போது தாராபுரத்தில் முன்னிலை வைத்திருப்பது அந்த கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த முடிவு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறலாம்.. அப்படி வென்றால் பின்னர் நடக்க இருக்கும் 5 தொகுதிகளில் தைரியமாக களத்தில் இறங்கலாம் என்பது தமிழக வெற்றி கழகத்தின் எண்ணமாக இருந்தது.
மேலும் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்தார் விஜய். ஆனால் தாராபுரத்தில் மூன்று சுற்றுகளில் சுமார் 1000 வாக்குகளுக்கு மேல் அதிமுக பெற்று முன்னணியில் இருக்கிறது. இதனால் தவெக சமீபத்தில் இணைந்த அதிமுகவினரும், அடுத்து இணையலாம் என காத்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதனை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் காரசார விவாதம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
