ம்ஹூம்.. அது இனி அவ்வளவு தான்! வேலைக்காகாத விஜய் மாஸ்! தாராபுரத்தில் தள்ளாடுதே தவெக! ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. மதுராந்தகத்தில் தவெகவுக்கு ஆதரவு அலை இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், தாராபுரத்தில் நிலைமை படு மோசமாக இருக்கிறது. குறிப்பாக முதல்வர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்து சென்ற பிறகு அந்த நிலை மாறவில்லை என்கின்றனர். பல இடங்களில் இன்னும் வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிர்ப்புதான் நிலவுகிறது என்கின்றது கால நிலவரம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

by election 2026 TVK Dharapuram Sathyabama

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வாக்காளர்கள். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் வாக்கு சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல்

இதற்கிடையே தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நேற்று முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், விஜய் வந்தும் தாராபுரம் தடுமாறுகிறது என்கின்றனர் அப்பகுதி வாக்காளர்கள். 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தாராபுரம் சத்யபாமா. தமிழக அளவில் விஜய் அலை இருந்தபோதும் தாராபுரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற சத்யபாமாவும் ஒரு காரணம்.

சத்யபாமா

சமுதாய ஆதரவு, இரட்டை இலை பலம், ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு அலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெற்றி பெற்றவர் சத்யபாமா. இந்த நிலையில் தாராபுரத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். விஜய் அலையையும் தாண்டி நாங்கள் வாக்களித்து உங்களை வெற்றி பெறச் செய்தால்.. நீங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா? இணைந்த கையோடு போட்டியிட வருவீர்களா? என எதிர்ப்பு தெரிவித்து சத்யபாமா செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக

போதாக்குறைக்கு அதிமுகவினரும் பிரச்சனை செய்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கே செல்லாமல் முடங்கி விட்டார் சத்யபாமா என்கின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் சத்தியபாமாவை விமர்சித்து அதிகமான பதிவுகள் தாராபுரம் பகுதியில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம் சத்யபாமா. அதனாலதான் நேற்று விஜய் முன்னிலையில் கண்ணீர் மல்க பேசினார்.

விஜய்

இதற்கிடையே விஜய் வந்த பிறகும் தாராபுரத்தில் நிலைமை சரியாகவில்லை என்பதுதான் அவரை கூடுதல் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர். இன்றும் சில பகுதிகளில் பிரச்சாரம் செய்ய சத்யபாமா திட்டமிட்டு இருந்த நிலையில் அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கலே இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் பிரச்சாரத்தை எப்படி மேற்கொள்வது என தெரியாமல் தவித்து வருகிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+