"விபரீதம்".. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. அந்த நியூஸ் வந்ததும்.. கலங்கி போய் பேசிய ஓபிஎஸ்!
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று ஓ பன்னீர்செல்வம் கலக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது. பொதுக்குழு கூட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓ பன்னீர்செல்வம், தமிழ்நாடு காவல்துறை இந்த நிகழ்விற்கு அனுமதி அளிக்க கூடாது என்று கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இந்த பொதுக்குழுவிற்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் சிலர் சென்னை மெரினாவில் பேரணி செய்தனர்.

பேரணி
அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் பலரும், தொண்டர்கள் பலரும் எடப்பாடிக்கு எதிராக பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் அவர்கள் இறுதியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி சென்றனர். அங்கு ஒப்பாரி வைத்து பெண்கள் பலர் வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என சொல்லி அவரது சமாதி முன்பு குவிந்த தொண்டர்கள் ஒப்பாரி வைத்து போராடினார்.

தீக்குளிப்பு
அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் உடனே இவரை தடுத்து நிறுத்தினர். வேகமாக ஓடி வந்து இவரை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஓ பன்னீர்செல்வம்
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ பன்னீர்செல்வம், மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றனர். அப்போது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தீக்குளிப்பு
அவர் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன், என்று ஓ பன்னீர்செல்வம் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications