ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியா?...நெருக்கடிகளுக்கு அடிபணிய மாட்டோம்...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியாக திமுகவை சித்தரிக்க முயற்சி நடைபெறுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆன்மீகத்திற்கு எதிராக கட்சியாக சித்தரிக்க முயற்சி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். நெருக்கடிகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது என்றும் சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்ட சம்பவம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. பட்டினப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் விளக்கம் அளித்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கூறினார்.

பாரம்பரிய நிகழ்ச்சி
பழம் பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நடைபெற்று வருகிறது. பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள். தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வு. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மிக நிகழ்வு என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நல்ல முடிவு
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதல்வரை சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என்று பேட்டியளித்திருந்தார்.

சேகர்பாபு அறிவிப்பு
பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்டதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர். மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் ஆதீனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
திராவிட முன்னேற்றக்கழகம் ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்று திட்டமிட்டு செய்தி பரப்பப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். எந்த ஒரு நெருக்கடிகளுக்கும் நாங்கள் அடிபணிந்து போக மாட்டோம் எனவும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications