இளைஞர்கள் கோபத்திற்கு பணிந்த மோடி அரசு.. பின்னணியில் உ.பி. சட்டசபை தேர்தல்.. சொல்கிறார் தராசு ஷ்யாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்முறையாக மாணவர்கள், இளைஞர்களின் கோபத்திற்கு மோடி அரசு பணிந்திருப்பதாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். தர்மேந்திர பிரதானை முன் கூட்டியே துறை மாற்றம் செய்திருக்கலாம் என்று கூறிய தராசு ஷ்யாம், இந்த நகர்வு உத்தரப் பிரதேச தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராடியது. டெல்லியில் தொடங்கிய இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள் சமூகமே வெகுண்டெழுந்தது.

Dharmendra Pradhan Tharasu Shyam BJP

இதனால் டெல்லி, சென்னை, கொல்கத்தா, பாட்னா, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிஜேபி கட்சியின் பிரதான கோரிக்கையான தர்மேந்திர பிரதான் ராஜினாமா மத்திய அரசால் ஏற்றக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் மாணவர்களின் போராட்டத்திற்கு பாஜக பணிந்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு பின் பாஜக பணிந்த 2வது போராட்டம் இதுவாகும். இதனால் மாணவர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், இளைஞர்கள் கோபத்திற்கு மத்திய அரசு அடி பணிந்துள்ளது.

இதனை மாணவர்கள் போராட்டம் என்று மட்டும் சுருக்கிவிடக் கூடாது. வாய்ப்புகள் மறுக்கப்படுவது, வேலையில்லா திண்டாட்டம் என்ற இளைஞர்களின் கோபம், நீட் புள்ளியில் இணைந்தது. அது தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் முடிந்துள்ளது. நீட் வினாத்தாள் கசிந்த போதே தர்மேந்திர பிரதானை துறை மாற்றம் செய்திருக்க வேண்டும். அதனை செய்திருந்தாலே, கோபம் அதிகரித்திருக்காது.

எப்படி இருந்தாலும், இளைஞர்கள் போராட்டத்தை இது சாந்தப்படுத்த உதவும். முதல்முறையாக ஒரு கோபத்திற்கு பாஜக அரசு பணிந்திருக்கிறது. அதேபோல் உத்தரப் பிரதேச தேர்தலை எதிர்கொள்ள ஒரு உத்தியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த கோபம் நிச்சயமாக சட்டசபைத் தேர்தல்களில் எதிரொலிக்கும். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையை நோக்கி தான் நடந்தது. அதில் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமாக மாறியது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+