அடடே.. தானாடாவிட்டாலும் சதை ஆடும்.. உதயநிதி ஸ்டாலினுக்கு "மதுரை சகோதரன்" வாழ்த்து!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி மு.க. அழகிரியின் மகன் தயா அழகிரி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமைச்சர் துரைமுருகன், உதயநிதியை அவருக்கான நாற்காலியில் அமர வைத்தார். பிறகு அவர் முதல்முறையாக 3 கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார்.

அறிஞர் அண்ணா
பிறகு முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் சமாதிகளுக்கு சென்று ஆசி பெற்றார். இதையடுத்து பெரியார் திடலுக்கு சென்று அங்கு மலர்த் தூவி வணங்கினார். இந்த பதவியேற்பு விழா 10 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது. இந்த விழாவில் மத்திய முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

முதல்வர் ஸ்டாலின்
காரணம் முதல்வர் ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. திமுகவிலும் ஆட்சியிலும் கருணாநிதி, மூத்த மகன் அழகிரியை காட்டிலும் ஸ்டாலினுக்கே நிறைய முன்னுரிமை கொடுத்ததால் சிறு சச்சரவுகள் நிலவின. இதனால்தான் அண்ணன்- தம்பி இடையே பேச்சுவார்த்தை இல்லை என சொல்லப்படுகிறது.

2021 சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய மகன் தயா அழகிரியும், மகள் கயல்விழியும் வந்திருந்தனர்.

மதுரை செல்லும் போதெல்லாம்...
அப்போது அவர்களை முதல்வர் குடும்பத்தினர் வரவேற்றனர். தயா அழகிரியும் உதயநிதியும் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இதன் பிறகு ஒவ்வொரு முறையும் மதுரை செல்லும் போது அழகிரியை ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில் தனது மகன் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

துரை அழகிரி
இந்த நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் முதல்வர் குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மு.க. அழகிரியின் மகன் துரை அழகிரி, தனது சகோதரர் உதயநிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் ஷேர் செய்து மகிழ்ந்தார். அது போல் உதயசூரியன் எமோஜியை போட்டு உதயநிதி ஸ்டாலின் எனும் ஹேஷ்டேக்கையும் போட்டுள்ளார். ட்விட்டரில் பல்வேறு சினிமா பிரபலங்களும் தயாரிப்பாளர்களும் உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காலில் விழுந்து வணங்கிய உதயநிதி
அது போல் அமைச்சராக பதவியேற்ற பிறகு தனது பெற்றோர் காலில் விழுந்து உதயநிதி வழங்கினார். அத்தை கனிமொழி ஆரத்தழுவி உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அது போல் உதயநிதியை வாரி அணைத்து முத்தமிட்டார் சித்தப்பா தமிழரசு! கட்சி நிர்வாகிகளும் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். ஓரிரு நாட்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து மழையில் நனைவார் என தெரிகிறது.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications