வருங்கால திமுக உதயநிதி ஸ்டாலின்! தயாநிதி மாறன் வைத்த ஐஸ்! திமுக பொதுக்குழு சுவாரஸ்யம்!
சென்னை: திமுக பொதுக்குழுவில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலினை வருங்கால திமுக என எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த ஆ.ராசாவை, ஆருயிர் சகோதரர் என்றும் கனிமொழியை அன்புச் சகோதரி எனவும் தயாநிதி மாறன் குறிப்பிட்டு அழைத்துள்ளார்.
வருங்கால திமுக உதயநிதி ஸ்டாலின் என அவர் கூறிய போது பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

திமுக பொதுக்குழு
திமுக தலைவராக ஸ்டாலின் 2-வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை வாழ்த்தி பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உதயநிதி தான் இனி திமுகவின் வருங்காலம் என்பதை பிரகனப்படுத்தினார். இவரது பேச்சு பொதுக்குழுவில் பங்கேற்ற இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்ததுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியிலும் கைதட்டலை அள்ளியது. உதயநிதி ஸ்டாலினை வருங்கால திமுக என தயாநிதி மாறன் குறிப்பிட்ட போது அதை ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தார்.

ஆருயிர் சகோதரர்
இதேபோல் ஒரு காலத்தில் ஆ.ராசாவுடன் எதிரும் புதிருமாக அரசியல் செய்த தயாநிதி மாறன், இப்போது ஆருயிர் சகோதரர் ஆ.ராசா என அழைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கனிமொழியையும் அன்புச் சகோதரி கனிமொழி எனக் குறிப்பிட்டு பேசி துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தயாநிதி மாறன் வாழ்த்துக் கூறினார். சிறுவயதில் அங்கிள் என்று அழைத்த துரைமுருகனை அண்ணன் என்று குறிப்பிட்ட போது தயாநிதி மாறனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

உதயநிதி சிரிப்பு
தன்னை வருங்கால திமுக என தயாநிதி மாறன் எம்.பி. பேசிய போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின் லேசாக புன்னகைத்ததோடு இப்போது எதற்கு இதை பேசுகிறார் என்கிற மைண்ட் வாய்ஸில் அவர் ரியாக்ஷன் கொடுத்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே மத்திய சென்னையில் திமுக பொதுக்குழுவை நடத்தியதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட தயாநிதி, மற்ற துணைப் பொதுச்செயலாளர்களான ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆகியோருக்கு சுருக்கமாக வாழ்த்துக் கூறினார்.

தயாநிதி பேச்சு
தயாநிதி மாறனின் பேச்சில் வழக்கமாக அவரிடம் இருக்கும் எனர்ஜி குறைவாகவே இருந்தது. வழக்கமாக கொஞ்சம் கேலி கிண்டலாக பேசக்கூடியவர் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் உற்சாகமில்லாத குரலில் பேசிவிட்டு அமர்ந்துள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications