திமுக எம்.எல்.ஏ.க்கள் -எம்.பி.க்கள் இடையே கிரிக்கெட் போட்டி! டீம் செலக்ஷனில் தயாநிதி மாறன் தீவிரம்!
திமுக எம்.எல்.ஏ.க்கள் -எம்.பி.க்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்தில் தயாநிதி மாறன்.
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் -நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவதில் அக்கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் தீவிரமாக உள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான இளம் எம்.எல்.ஏ.க்கள் டீமை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓடி ஆடி விளையாண்டால் நல்ல ஆரோக்யத்தோடு இருப்பார்கள் என்றும் இடைத்தேர்தலே வராது எனவும் நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கூட பேசியுள்ளார்.

திமுக வரலாற்றில்
திமுக வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் சட்டத் திட்ட விதி 26 பிரிவு 1-ன் படி விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய சார்பு அணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த அணியின் முதல் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தயாநிதி மாறன் எம்.பி. தனது அணி சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறார்.

எம்.எல்.ஏ. -எம்.பி.
இதனிடையே இதிலெல்லாம் கிடைக்காத வெளிச்சமும், பப்ளிசிட்டியும், திமுக எம்.எல்.ஏ.க்கள் -எம்.பி.க்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தினால் கிடைக்கும் என நம்புகிறார். இதனால் தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் -நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கிரிக்கெட் விளையாடினால் அது தமிழகம் தழுவிய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எண்ணுகிறார்.

இடைத்தேர்தல் வராது
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான இளம் எம்.எல்.ஏ.க்கள் டீமை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓடி ஆடி விளையாண்டால் நல்ல ஆரோக்யத்தோடு இருப்பார்கள் என்றும் இடைத்தேர்தலே வராது எனவும் நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கூட பேசியுள்ளார்.

முக்கியப் பதவி
திமுகவில் முக்கிய பதவியை எதிர்பார்த்த தயாநிதி மாறனுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தாலும் கூட அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications