"அந்த பக்கம் போ".. பிராவோ காதில் ரகசியமாக சொன்ன தோனி.. அடுத்த நொடி நடந்த செம சம்பவம்.. வீடியோ
சென்னை: நேற்று சிஎஸ்கே பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின் தோனி செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நேற்று சிஎஸ்கே பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின் சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் தனது தோழி ஜெயா பரத்வாஜ் என்ற பெண்ணிடம் காதலை சொன்னார். ஜெயா முன் முட்டிபோட்டு, ரிங் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்கு ஜெயா காதலுக்கு ஒப்புக்கொண்டார்.
சாகரும் அவரது காதலி ஜெயாவும் பல காலமாக நண்பர்கள். இவர்கள் டேட்டிங் செய்து வந்த தகவலும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

வைரல்
சாகர் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்த இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது. நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் அதை எல்லாம் மறக்க அடிக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்து இருந்தது. பல வருட தோழியை சாகர் இப்படி கரம் பிடிப்பது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும், நெட்டிசன்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

தோழி
நேற்று போட்டிக்கு பின்பாக ஹோட்டலிலும் சிஎஸ்கே இதை சிறப்பாக கொண்டாடியது. ஹோட்டலுக்குள் வந்த சாகரை ரெய்னாவின் மகள்தான் வரவேற்றார். சாகர் திரும்பி வந்ததும் ஹோட்டல் லாபியில் பெரிய அளவில் கேக் வைத்து அதை வெட்டினார்கள். சாகர் மற்றும் அவரது காதலி ஜெயா ஆகியோர் ஒன்றாக கேக் வெட்டி பகிர்ந்துகொண்டனர் .

கேக்
கேக் வெட்டியதும் அங்கே இருந்த தோனி செய்த குறும்புதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று சாகர் கேக் வெட்டியதும் அவருக்கு பின் அமைதியாக நின்று கொண்டு இருந்த தோனி உடனே பிராவோ, ஜடேஜா இருவரின் காதிலும் ஏதோ கிசுகிசுத்தார். அந்த பக்கம் போய் நில்லுங்கள் என்பது போல இருவரின் காதிலும் தோனி கிசுகிசுத்தார். இதையடுத்து உடனே பிராவோவும், ஜடேஜாவும் ஒவ்வொரு பக்கம் போய் நின்றார்.

தூக்கினார்
சாகரின் பின்பக்கம் நின்ற தோனி, உடனே சாகரை தூக்கினார். பின்பக்கமாக வந்து சாகரின் கையை தோனி பிடிக்க, பிராவோ அவரின் காலை பிடித்து தூக்கினார். இரண்டு பேரும் இரண்டு பக்கங்களில் சாகரை பிடித்து தூக்கிய நிலையில் ஜடேஜா உள்ளிட்ட மற்ற வீரர்கள் சாகர் உடல் முழுக்க கேக் பூசினார்கள்.
கேக் பூசினார்கள்
அதோடு அவரின் முகத்தில் ஜுஸ் ஊற்றினார்கள். இதனால் கேக் வெள்ளத்தில் மிதந்த சாகர் அங்கேயே அப்படியே தலையை மூடிக்கொண்டு சிரித்தபடி உட்கார்ந்தார். களத்தில் அமைதியாக இருக்கும் தோனி நேற்று ஹோட்டலில் இப்படி நடந்த கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.

தோனி
இதற்கு முன்பே பிராவோ பிறந்த நாளின் போதும் தோனி இதேபோல்தான் செயல்பட்டார். அவரின் முகத்திலும் தோனி கேக் பூசினார். களத்தில் தோனி எப்படி கூல் கேப்டனோ அதேபோல் களத்திற்கு வெளியிலும் மிகவும் ஜாலியாக நடந்து கொள்ள கூடியவர். நேற்று சாகரிடம் தோனி உள்ளிட்ட வீரர்கள் குறும்பு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications