Goundamani in TVK: தவெகவில் கவுண்டமணி இணைந்துவிட்டாரா? வைரலாகும் போட்டோ! நடந்தது என்ன?
சென்னை: நடிகர் கவுண்டமணி, விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் இருவரும் சேர்ந்து ஒன்றாக நடித்த நிலையில் அரசியல் பணியிலும் விஜய்யுடன் கவுண்டமணி இணைந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அந்த கட்சியில் ஏராளமான இளைஞர்களும் பெண்களும் இணைந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ஈரோடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தனது வீட்டில் 9 ஓட்டுகள் இருப்பதாகவும், அவர்களில் யாராவது விஜய்க்கு ஓட்டு போடாவிட்டால் சோற்றில் விஷம் வைத்துவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பலர் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதே கட்சியை சேர்ந்த அருண்ராஜோ, "அவர் சொன்னது தவறுதான். ஏதோ விஜய் மீதுள்ள பாசத்தால் அந்த பெண் அப்படி சொல்லிவிட்டார். அதை பெரிதுப்படுத்த வேண்டாம்" என கேட்டுக் கொண்டார்.
இப்படி நாளுக்கு நாள் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி கொண்டே செல்கிறது. அண்மைக்காலமாக விஜய் கட்சியில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், நடிகர் ரவி போன்றோர் இணைந்துள்ளனர்.
அது போல் பல கட்சியிலிருந்து விலகிய பலர் தவெகவில் இணைந்துள்ளனர். அது போல் வரும் தேர்தலுக்காக தவெகவில் இணைய கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.
செங்கோட்டையன் இணைப்புக்கு பிறகு பெரிய அளவில் பிரபலங்கள் யாரும் தவெகவில் இணையவில்லை. இந்த நிலையில்தான் தவெகவில் கவுண்டமணி இணைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. விஜய்க்கும் கவுண்டமணிக்கும் இடையே நல்ல நட்புள்ளது.
இருவரும் சேர்ந்து ரசிகன், கோயமுத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளனர். கவுண்டமணியின் கவுன்ட்டர் டயலாக்குகளும் விஜய்யின் காமெடி டைமிங்கும் பெரிதும் பேசப்பட்டன.
கவுண்டமணி பொதுவாகவே சினிமா வட்டாரத்தில் பெரிய நட்பு வட்டம் வைத்துக் கொள்ளாதவர். ஆனால் சத்யராஜ், மணிவண்ணன் போன்றோருடன் நெருக்கம் காட்டி வந்தார். வேறு யாராவது அவரை சந்திக்க வந்தால் அரசியல், சினிமா குறித்து தனக்கே உரிய நய்யாண்டித்தனத்துடன் அவர் பேசுவார் என பலர் சொல்லி கேட்டிருக்கிறோம்.
ஆனால் விஜய்க்கு கவுண்டமணி மீது நல்ல நட்பு உள்ளது. கடந்த மே மாதம் கவுண்டமணியின் மனைவி சாந்தி இறந்த போது விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கவுண்டமணியை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். 2 படங்களில் மட்டுமே இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும் இருவருக்குமான உறவு என்பது அளப்பரியது என பேசப்பட்டது.
இந்த நிலையில்தான் விஜய் கட்சியில் கவுண்டமணி இணைந்துவிட்டதால் அபிஷேக் கோபல்லா என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு, அதற்கான புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
அதில் "விஜய் தம்பிக்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன். 2026 தேர்தல் களம் சூடாக இருக்க போகிறது. பழனிசாமி இத்துடன் காலியாக போகிறார்" என பதிவிட்டிருந்தார். அத்துடன் விஜய், நடிகர் கவுண்டமணிக்கு சால்வை அணிவித்து வணக்கம் சொல்லும் புகைப்படமும் பகிரப்பட்டிருந்தது.
அந்த படத்தை பார்க்கும் போதே ஏதோ வேலைகள் நடந்திருப்பது நன்றாக தெரிந்தது. நினைத்தது போலவே அந்த படம் உண்மையான படமல்ல, தவெகவில் செங்கோட்டையன் இணைந்த போது எடுத்த படம். அதை எடிட் செய்து கவுண்டமணியின் முகத்தை ஒட்டிவிட்டனர். எனவே தவெகவில் கவுண்டமணி இணையவில்லை என்பதுதான் உண்மைச் செய்தி! கவுண்டமணி இறந்துவிட்டார் என்றெல்லாம் வதந்தி பரவியிருந்த நிலையில் தற்போது அவர் தவெகவில் இணைந்துவிட்டார் என்ற வதந்தி வைரலாகி வருகிறது. எனவே இதை யாரும் நம்ப வேண்டாம். இந்த படத்தை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டது என தெரிகிறது. மேலும் விஜய்யும் தற்போது மலேசியாவில் இருப்பதால் இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
-
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன












Click it and Unblock the Notifications