விஜய் சென்ற கார் இன்று சிக்னலை மதிக்காமல் போனதா? திடீரென வெளியான வீடியோவால் பரபரப்பு
சென்னை : மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் இன்று சந்தித்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த போது விஜய்யின் கார் சென்னையில் சிக்னலை மதிக்காமல் வந்ததாக ஊடகம் ஒன்றில் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அரசியலில் கண்டிப்பாக இறங்குவார் என்று கூறும் விஜய் ரசிகர்கள் அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நீண்ட காலம் முன்பே விஜய் தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டார். விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் ரத்த தானம் செய்வது, ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, அன்னதானம் செய்வது, முதியோர் இல்லங்களில் உதவுவது போன்ற பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறார்கள். இதனையும் விஜய்யும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இசை வெளியிட்டு விழா மேடைகளில் தனது ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வரும் விஜய், அந்த மேடைகளில் அடிக்கடி அரசியலும் பேசினார்.
இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இதையடுத்து உற்சாகம் அடைந்த விஜய், பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் அடிக்கடி தனது ரசிகர்ளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 17 ஆம் தேதி விஜய் 234 தொகுதியில் இருந்தும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்ததோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது விஜய் நேரடியாகவே அரசியல் பேசினார்.
இதனால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானது. 234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சென்னைக்கு அழைத்தார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள இல்லத்திற்கு 234 தொகுதியில் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வந்தனர். அவர்களிடம் ஆலோசனை நடத்திய விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் பனையூரில் இருந்து புறப்பட்டு தனது இல்லத்திற்கு சென்றார்.
முன்னதாக விஜய் இன்று மாலை காரில் பனையூருக்கு வரும் போது சிக்னலை மதிக்காமல் அவர் கார் சென்றதாக பிரபல ஊடகம் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ குறித்து பலரும் விவாதித்து வருகிறார்கள். விஜய் அப்படி செல்லக்கூடியவர் இல்லை என்றும் டிவி தொலைக்காட்சியினர் தவறாக காட்டுவதாகவும் விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை போலீஸ் வெளியிட்டால் தான் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications