Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, பாஜக 27 தொகுதிகளில் களம் காண்கிறது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் (சட்டமன்றத் தொகுதி வாரியாக), பாஜக போட்டியிடும் இந்த 27 தொகுதிகளின் கள நிலவரம் என்ன?

27-ன் ஜாதகம்: பலமா? பலவீனமா?

2024-ல் பாஜக காட்டிய 'மாஸ்' பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் பார்த்தால், தற்போது அவர்கள் வாங்கியிருக்கும் 27 தொகுதிகளில் சில இடியாப்ப சிக்கல்கள் ஒளிந்துள்ளன.

AIADMK Edappadi Palanisamy

அந்தத் தொகுதிகள்: மயிலாப்பூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு கிழக்கு, தர்மபுரி, வேலூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஓசூர், பொள்ளாச்சி, நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருப்பூர் வடக்கு, தஞ்சாவூர் மற்றும் திருச்சி நகர்ப்புறம்.

1. வைப்புத் தொகை கவலை! (Security Deposit)

கடந்த முறை வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பாஜக போட்டியிடும் 27-ல் 5 தொகுதிகளில் அக்கட்சி 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்று டெபாசிட் இழந்திருக்கிறது.

அந்த 'பஞ்ச' பாண்டவ தொகுதிகள்: பெரம்பலூர், கரூர், அரக்கோணம், சிவகங்கை மற்றும் தஞ்சாவூர். இங்கு தாமரை மலர இன்னும் கூடுதல் 'உரம்' தேவைப்படும் போல!

2. 15% பார்டர் லைன்!

அடுத்ததாக, 9 தொகுதிகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் 15% அல்லது அதற்கும் குறைவாகவே இருந்துள்ளது.

பட்டியல்: திருச்சி நகர்ப்புறம், வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் வடக்கு, ஈரோடு கிழக்கு, தர்மபுரி மற்றும் விருதுநகர்.

3. 'நோட்டா'வுக்கு அடுத்தபடியா? (மூன்றாம் இடம்)

அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 'நாங்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி' என பாஜக முழங்கினாலும், அவர்கள் போட்டியிடும் 11 தொகுதிகளில் அதிமுகவை விட பின் தங்கி மூன்றாம் இடத்தையே பிடித்திருக்கிறார்கள்.

அவை: ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரக்கோணம், வேலூர், ஈரோடு கிழக்கு, பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை.

நகர்ப்புற கோட்டைகளை நழுவ விட்டதா பாஜக?

மிக முக்கியமான ட்விஸ்ட் இங்குதான் இருக்கிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற 'நகர' ஏரியாக்களில் பாஜக வலுவாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தொகுதிப் பங்கீட்டில் அவை கைகூடவில்லை.

சென்னை செக்: சென்னையில் மொத்தம் உள்ள 18 தொகுதிகளில், 13 தொகுதிகளில் (எ.கா: தியாகராய நகர், அண்ணா நகர், வேளச்சேரி, பெரம்பூர் உள்ளிட்டவை) அதிமுகவை விட பாஜக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. ஆனால், இப்போது பாஜக போட்டியிடுவதோ வெறும் மயிலாப்பூர் தொகுதியில் மட்டும்தான்!

கோவை கொங்கு: கோயம்புத்தூரின் 6 தொகுதிகளிலும் (கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்டவை) அதிமுகவை விட பாஜக அசுர பலத்தில் இருந்தது. ஆனால் கைவசம் இருப்பதோ வெறும் கோவை வடக்கு மட்டுமே.

மதுரை மல்லி: மதுரையில் 3 தொகுதிகளில் முன்னிலையிலும், மற்ற 3-ல் அதிமுகவுக்கு இணையாகவும் இருந்த பாஜகவுக்கு, தற்போது ஒதுக்கப்பட்டிருப்பது மதுரை தெற்கு மட்டுமே.

சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் அதிமுக நகர்ப்புறங்களில் பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அப்படியிருக்க, பாஜக தனது பலமான நகர்ப்புற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, கடினமான களங்களை ஏற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமே.

இந்தத் தொகுதிப் பங்கீடு பாஜகவின் வெற்றி வாய்ப்பை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே தாரைவார்த்து விடுமோ என்ற கேள்வி எழுகிறது. "கூட்டணி தர்மத்துக்காக" கொடுத்தார்களா அல்லது "தவறுதலாக" விட்டுக்கொடுத்தார்களா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+