பாதுகாப்பே இல்லை.. கோலி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்தாரா அஸ்வின்? உண்மை என்ன.. பரபர பின்னணி
சென்னை: பிசிசிஐ அமைப்பிடம் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக உண்மையில் நடந்தது என்ன? அஸ்வின் புகார் கொடுத்தது உண்மையா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஆடி வரும் பெங்களூர் கேப்டன் கோலி பெங்களூர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர்தான் கேப்டனாக கடைசி தொடர் என்று கோலி அறிவித்து இருக்கிறார்.
இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பாக ஓய்வு பெற போவதாக அறிவித்த கோலி தற்போது ஐபிஎல் கேப்டன் பதவியில் இருந்தும் விலக போவதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் கோலியின் இந்த முடிவுகளுக்கு பின் அஸ்வின்தான் காரணம் என்று சில விளையாட்டு இணைய பக்கங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அஸ்வின்
அதன்படி ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடந்த பிசிசிஐ கூட்டம் ஒன்றில் அஸ்வின் கோலி குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. கோலிக்கு கீழ் பாதுகாப்பாக உணர முடியவில்லை. அணி தேர்வில் தவறு செய்கிறார். உலகக் கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டியில் கோலி முனைப்புடன் கேப்டன்சி செய்யவில்லை. அன்று அவரின் ஆடும் 11 பேர் கொண்ட அணி தேர்வும் சரியாக இல்லை.

மோசமான கேப்டன்சி
கோலிக்கு கீழ் பல மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று ஒரு மூத்த வீரர் பிசிசிஐ அமைப்பிடம் புகார் அளித்ததாக அந்த கட்டுரைகளில் கூறப்பட்டு இருந்தது. அந்த மூத்த வீரர் அஸ்வின்தான் என்று இதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அஸ்வின்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். தொடர்ந்து 4 போட்டிகளில் இவரை எடுக்காமல் கோலி புறக்கணித்தார்.

புகார் அளித்தாரா?
இதனால்தான் அஸ்வின் கோலிக்கு எதிராக புகார் அளித்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே கோலிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, பதவி விலக வைக்கப்பட்டார். அதோடு இதன் காரணமாகவே அஸ்வினை டி 20 உலகக் கோப்பை அணியில் எடுத்தனர். கோலிக்கு நெருக்கமான சாஹலை இதனால்தான் அணியில் எடுக்கவில்லை என்று அந்த செய்திகளில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கோலிக்கு எதிராக அஸ்வின் எந்த விதமான புகாரையும் அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அஸ்வின் புகார்
அஸ்வின் கோலிக்கு எதிராக புகார் தரவில்லை. அவர் டி 20 உலகக் கோப்பை அணியில் எடுக்கப்பட்டது முழுக்க முழுக்க அவரின் திறமை காரணமாகத்தான். முக்கியமாக ஐபிஎல் தொடரில் அஸ்வின் ஆடிய விதத்தை வைத்தே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அஸ்வின் கோலிக்கு எதிராக பிசிசிஐ அமைப்பிடம் எதுவும் பேசவில்லை.

காரணம்
வேறு ஒரு மூத்த வீரர்தான் கோலிக்கு எதிராக புகார் கொடுத்தார். டெஸ்ட் அணியை சேர்ந்த மூத்த வீரர் ஒருவர் கோலிக்கு எதிராக புகார் கொடுத்தார்.. ஆனால் அது அஸ்வின் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அஸ்வின் இப்படி புகார் அளிக்கும் ஆள் கிடையாது என்று தகவல்கள் வருகின்றன.

கோலி முடிவு காரணம்
இந்திய டி 20 கேப்டன் மற்றும் ஐபிஎல் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலக முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட முடிவுதான் காரணம். அவரின் பேட்டிங் பார்ம் காரணமாக, பிரஷரை குறைக்கவே கோலி இந்த முடிவை எடுத்தார். அஸ்வினுக்கும் கோலியின் கேப்டன்சி மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை. கோலிக்கு எதிராக புகார் கொடுத்த மூத்த வீரர்.. அஸ்வின் கிடையாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications