Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வில்சனின் விளாசல்.. திமுகவை ஒரேடியா டேமேஜ் செய்த அண்ணாமலை! பாஜகவை புட்டு புட்டு வெச்சிட்டாரு வில்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவை சரமாரி விமர்சித்திருக்கும் தமிழக பாஜக அண்ணாமலைக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்பு கச்சத்தீவு குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.. அப்போது அவர் சொன்னபோது:

Did BJP Annamalai slams DMK Government and what did DMK MP Wilson asks about RTI information

கச்சத்தீவு: கடந்த, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை, அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருந்தார்.. இலங்கை தலைநகர் கொழும்பில், 1973ல் நடந்த வெளியுறவு துறை அதிகாரிகளின் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டது.

அதற்கு மறுஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டது. கருணாநிதிக்கு தெரிந்தே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கருணாநிதி:
1974ல் கருணாநிதியும், வெளியுறவு துறை அமைச்சரும் சந்தித்து பேசிய குறிப்புகள், தற்போதைய ஆர்.டி.ஐ., தகவல்கள் வாயிலாக வெளிவந்துள்ளன. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசை மட்டுமே தி.மு.க., குறை சொல்லி வந்தது. உண்மையில், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில், தி.மு.க.,வுக்கும் முழு பங்கு உண்டு" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.. அதுமட்டுமல்ல, ஆர்டிஐ ஆவணத்தை பச்சைப் பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தன்னுடைய எக்ஸ் தளபதிவில் இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.. அதில் கூறியிருப்பதாவது:

பொய் தகவல்: "கச்சத்தீவு விவகாரம் புனையப்பட்டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட RTI தகவல் தற்போது உண்மையில்லை என நிரூபணமாகியுள்ளது.

1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு RTI தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

புனையப்பட்ட தகவல்: இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளை திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா? இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

2024 பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்? இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழகத்தை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள்.

கேள்விகள்: கச்சத்தீவை மீட்பத்தில் பா.ஜக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை? என்று வில்சன் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு பாஜக என்ன பதிலடி தரப்போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

முன்னதாக, இந்த சர்ச்சை குறித்து, திமுக செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் சொல்லும்போது, கச்சத்தீவு குறித்து எந்த அதிகாரி பெயரில், ஆர்.டி.ஐ., ஆவணம் வெளியிடப்பட்டதோ, அப்படி ஒரு அதிகாரியே அந்தத் துறையில் இல்லை. அரசின் துறை சார்ந்து ஆர்.டி.ஐ., வாயிலாக ஆவணத்தை கேட்கும்போது, தகவல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அதைக் கொடுக்கவில்லை.

ஆவணம்: அரசின் கீழ்நிலை செயலர் அளித்த ஆவணத்தில் உள்ள தேதியில் தான், ஆங்கில நாளேடு ஒன்றில் கச்சத்தீவு குறித்த கட்டுரையும் வெளியானது. அப்படியானால், ஆவணம் வெளியான தேதிக்கு முந்தைய தினமே, ஆங்கில நாளேட்டுக்கு தகவல் போனது எப்படி? திட்டமிடாமல் யார் அதை செய்திருக்க முடியும்? ஆர்.டி.ஐ., ஆவணத்தை அலுவல் நேரப்படி காலை 10:00 முதல் மாலை 5:00 மணிக்குள் தான் கொடுத்திருக்க வேண்டும்.

முதல் நாளே நாளேட்டுக்கு தகவல் சென்ற பின்னணி என்ன?,அந்த செய்தி, தங்களுக்கு எப்படி வந்தது என்பது குறித்து, அந்த நாளேடும் சொல்லவில்லை. ஆனால், அதை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசுகிறார். மத்திய அரசின் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி, தனக்கு வேண்டிய தகவலை எளிதாக பெற முடியும். இருந்தும், எல்லா விஷயங்களிலும் பாஜக சதி செய்தே பழக்கப்பட்டு விட்டது என்பதால், இந்த விஷயத்திலும் ஏதோ ஒரு சதியை கட்டமைக்க முயன்றுள்ளனர்.

பிரதமர் மோடி: யாரோ ஒரு அதிகாரி வெளியிட்ட தகவலை வைத்து, நாட்டின் நிர்வாக தலைமையாக உச்சபட்ச பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடியே பேசுகிறார் என்றால், அவரைப் பற்றி எந்தவிதமான மதிப்பீட்டுக்கு மக்கள் வருவர்? என்பதையும் பார்க்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+