ஆளுநர்கிட்ட சொல்லுங்க.. எடப்பாடி வைத்த கோரிக்கை.. டெல்லி சொன்ன நெகட்டிவ் பதில்.. ஆ போச்சே!
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய எடப்பாடியை இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். இதில் பல்வேறு முக்கியமான விஷயங்களை அவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.
டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி அருகிலேயே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு தேசிய அளவில் கொடுக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக தமிழ்நாட்டில் அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசி உள்ளனர்.

முதலில் அரசல் புரசலாக அதிமுக வலிமை பற்றி எடப்பாடி காதுபட மற்ற கட்சிகள் பேசிக்கொண்டு இருந்தன. இந்த நிலையில்தான் கூட்டத்தின் போது வெளிப்படையாக 2024 தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெறும் மிக முக்கியமானது. அந்த வெற்றி என்டிஏ கூட்டணிக்கு முக்கியமானதாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டில் அதிமுக தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.
சென்னை மீட்டிங்: தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய எடப்பாடியை இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, டெல்லியில் நடந்த விவாதங்களை பகிர்ந்து கொண்டார் எடப்பாடி. குறிப்பாக, கூட்டம் முடிந்ததும், எடப்பாடி தங்கியிருந்த அறைக்கு ஜே.பி.நட்டாவும், அமைச்சர் பியூஸ்கோயலும் வந்துள்ளனர்.
மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டும் நேரமின்மையால் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து, ஜே.பி.நட்டாவை சந்தியுங்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டது. அந்த வகையில்தான் பியூஸ்கோயலுடன் சென்று எடப்பாடியை சந்தித்துள்ளார் ஜே.பி.நட்டா. இதனை சீனியர்களிடம் பகிர்ந்துகொண்ட எடப்பாடி.
நம்முடைய முன்னாள் மந்திரிகளுக்கு எதிராக நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற திமுகவின் அரசியலை குறித்து நட்டாவிடம் சுட்டிக்காட்டி, அப்படி எந்த ஒப்புதலும் கவர்னர் கொடுத்துவிடக் கூடாது என கவர்னருக்கு ஒரு அட்வைஸை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
ஆனா அவர்களோ, நிர்வாக ரீதியிலாக, சட்ட ரீதியிலாக தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த ஒரு விசயத்திலும் மத்திய அரசு தலையிடாது. சட்ட பிரச்சனைகளை நீங்கள்தான் சரி செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லி நமது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இது, சீனியர் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.
தொடர்ந்து நடந்த ஆலோசனையில், ''பாஜகவுடன் தேர்தல் கூட்டணி நீடிக்கும். ஆனால், தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. இதில் மாற்றம் இருந்தால் அதனை நாங்கள் ஏற்க முடியாது. அதேபோல, கூட்டணிக்குள் ஓபிஎஸ்சையும் தினகரனையும் சேர்த்துக்கொள்ள வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் பாஜகவுடன் கூட்டணி நீடிக்குமா என நான் சொல்ல முடியாது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி (அதிமுக-பாஜக கூட்டணி) நீடிக்கும் நிலையில், ஓபிஎஸ்-தினகரனுடன் தனியாக ஒரு கூட்டணியை பாஜக அமைத்தாலும் அதனையும் நாங்கள் ஏற்பது கடினம்'' என்றும் பியூஸ் கோயலிடமும் நட்டாவிடமும் சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இந்த முடிவை எடுத்ததில் எடப்பாடியை பாராட்டியிருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications