நான் வருகிற வரை காத்திருக்க வேண்டாம்.. செந்தில் பாலாஜி கிரீன் சிக்னல்.. ஸ்டாலின் மேசைக்கு போன மெசேஜ்
சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு தரப்பு காத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்று அல்லது அடுத்த வாரம் வழக்கில் முக்கிய உத்தரவுகள் வரும் வாய்ப்புகள் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு உறுதியாக ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவில்லை? உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு பென்ச் ஒவ்வொரு மாதிரி முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த முறை அமலாக்கத்துறையை கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

எத்தனை நாள் உள்ளே வைத்து இருப்பீர்கள் என்று அமலாக்கத்துறையை கேட்டுள்ளனர். செந்தில் பாலாஜி இதனால் எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை. கீழ் கோர்ட்டில் சாட்சிகள் விசாரணை நடக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே வாக்குமூலம் வாங்கப்பட்டுவிட்டது. இனி இதில் அவர் சாட்சியங்களை எப்படி மாற்ற முடியும். இனி அவரை உள்ளே வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதனால் செந்தில் பாலாஜி எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை. தீர்ப்பு எந்த பக்கமும் வரலாம்.
காத்திருக்கும் அரசு; இப்படிப்பட்ட நிலையில்தான் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை தாமதமாவதால் அமைச்சரவை மாற்றம் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசு தரப்பு காத்து இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
அவர் வந்ததும்.. அவரையும் சேர்த்துக்கொண்டு அமைச்சரவையை மாற்றலாம். இப்போது மாற்றினால்.. பின்னர் மீண்டும் மாற்ற வேண்டி இருக்கும். அவர் சில நாட்களில் வந்துவிடுவார். அதுவரை காத்து இருக்கலாம் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை: செந்தில் பாலாஜி விரைவில் வரலாம். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை தாமதம் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். ஆனால் ஸ்டாலின் அவருக்காக காத்து இருக்கிறாரா? அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை? சீனியர்கள் சிலர் வேலை பார்க்கவில்லை என்று புகார் உள்ளது. இதை எல்லாம் ஆய்வு செய்வதால்.. தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி மெசேஜ்: இப்படிப்பட்ட நிலையில்தான் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி.. நான் வரும் வரை காத்திருக்க வேண்டாம். அமைச்சரவை பணிகளை செய்யுங்கள். என்னால் எந்த விதமான பணிகளும் தடைபட வேண்டாம், என்று கூறியுள்ளாராம்.
இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை.. செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சி அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் மூத்த தலைவர்கள் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் இதையடுத்து அவசர மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நாளை அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications