போனை போட்டு கடிந்த ஸ்டாலின்! ஆக்சனில் இறங்கிய அன்பில்! உன்னை சும்மா விடமாட்டேன்.. சிக்கிய மகா விஷ்ணு
சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினர் மகாவிஷ்ணுவின் பேச்சு.. தமிழ்நாடு முழுக்க சர்ச்சையாகி உள்ளது. மூட நம்பிக்கையை தூண்டும் வகையில் பேசியது மட்டுமன்றி.. அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்தியதும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை தமிழ்நாடு முழுக்க மக்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். இதில்தான் அவர் மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். அதோடு அங்கே இருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரையும் அவமானப்படுத்தி உள்ளார்.

இவரை மேடையிலேயே சங்கர் என்ற ஆசிரியர் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசிய சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. சங்கர் என்ற இந்த பார்வையற்ற ஆசிரியரைஅங்கேயே மகா விஷ்ணு கிண்டல் செய்யும் வகையில் அவமானப்படுத்தி உள்ளார்.. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியர் சங்கர் தமிழ்நாடு முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார். இன்று ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து மேடையில் அமரவைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புகார்: சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால்தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என அவர் பேசியது எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
பணியிட மாற்றம்: பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் என்று அந்த மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்து உள்ளார். உன்னை சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.
ஸ்டாலின் போன் கால்: இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தமிழ்நாட்டிற்கு போன் செய்து பேசி உள்ளாராம். கோட்டை வட்டார தகவல்களின்படி, கோட்டை அதிகாரிகளுக்கு இந்த போன் கால் சென்றுள்ளது. அதில்.. இந்த விவகாரத்தில் உடனே ஆக்சன் எடுங்கள்.. தலைமை ஆசிரியரை மாற்றுங்கள்.. விசாரணை குழு அமையுங்கள் என்று ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கைமீறி போனதை முதல்வர் விரும்பவில்லை.
ஏற்கனவே டிராஸ்ன்பர் விவகாரத்தில் ஸ்டாலின் அரசு மீது ஆசிரியர்கள் சிலர் கோபத்தில் உள்ளார்களாம். இப்போது ஆசிரியர் அவமானத்தப்படுத்தப்பட்ட விவகாரம் இன்னும் சர்ச்சையாகவே ஸ்டாலின் நேரடியாக இதில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யபடலாம் எனவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications