ராஜினாமா கடிதம் தாங்க.. கட்சி தலைவரிடம் லெட்டர் எழுதி வாங்கிய டெல்லி? பெரிய அரசியல் ட்விஸ்ட்
சென்னை; தமிழக அரசியலில் புதிய ஒரு சூறாவளி செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது.. அந்த செய்தியில் சாராம்சம் இதுதான்.. தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை எழுதி அந்த கட்சியின் டாப் லீடர் வாங்கிக்கொண்டனர்... மாநில தலைவரும் அதை எழுதி கொடுக்க தேசிய தலைமை அதை ஏற்றுகொண்டது.. ஆனால் அந்த தலைவரின் விசுவாசிகள் மட்டும்.. அவர் வேறு லெட்டர் கொடுத்தார்.. அது ராஜினாமா லெட்டர் இல்லை என்று சமாளித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசியலில் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. வங்கதேச அரசியல் ஒரு பக்கம் உலகம் முழுக்க சூடு பிடிக்க.. இன்னொரு பக்கம் தமிழக அரசியலும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவரை பதவியில் இருந்து தூக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அவரின் கட்சி ஆட்களே இதற்கான பணிகளை செய்து வருகிறார்களாம்.

இது தொடர்பாக நமக்கு வந்த தகவலில், தேசிய கட்சி ஒன்று மாநில தலைவர் பதவியில் இருந்து முக்கியமான நபர் ஒருவர் ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அந்த புள்ளியிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டனர். அதை கட்சியின் தேசிய தலைமை ஏற்றுகொண்டது.
ஆனால் அந்த தலைவரின் விசுவாசிகள் மட்டும்.. அவர் வேறு லெட்டர் கொடுத்தார்.. அது ராஜினாமா லெட்டர் இல்லை என்று சமாளித்து வருகின்றனர். அந்த தலைவர் மீது நிறைய முதலீடு செய்துள்ளனர். அவரை வைத்து அறுவடை செய்ய வேண்டும். இப்படி இருக்க புதிய தலைவரை கொண்டு வந்தால் சிக்கல் ஆகும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அப்படி எல்லாம் இல்லை. அந்த தலைவர் பெரிதாக மாற்றம் எதையும் எதுவும் செய்யவில்லை. அவர் தான் இருக்கும் கட்சியை வெற்றி பெறவைப்பேன் என்று கூறினார். ஆனால் அப்படி வெற்றிபெறவைக்க முடியவில்லை. சொந்த கட்சிக்கு உள்ளேயே அவரால் பிரச்சனை. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக எதிராக போஸ்ட் செய்யவே முடியாத நிலை உள்ளது.
அவருக்கு பில்ட் அப் மட்டுமே கொடுத்தனர். இங்கே அங்கே பேட்டி கொடுத்தார் . சர்ச்சை ஆனார். ஆனால் அதெல்லாம் அவருக்கு எடுபடவில்லை. அவருக்கு கீழ் கட்சியும் ஜெயிக்கவில்லை... வளரவும் இல்லை. இதனால் டெல்லி அவர் மீது அப்செட்டில் உள்ளது.
அவருக்கு காசு சம்பாதிப்பதே நோக்கம். காசு சம்பாதிப்பதே நோக்கம். கோல் போஸ்ட் இல்லாமல்.. கோல் கீப்பர்இல்லாமல் கோல் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு. அதில் எல்லா சுதந்திரம்.. பணம் என்று அள்ளிக்கொடுத்து உள்ளனர். அவருக்கு முழு ஆதரவு கொடுத்தனர். ஆனால் இந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் இழந்து விட்டார். தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை இழந்துவிட்டார். இதனால் அவர் மீது அப்செட்டில் உள்ள தலைமை அவரிடம் ராஜினாமா கடித்தை வாங்கிக்கொண்டது.
அவருக்கு எதிராக புகார் மேல் புகார் சென்றுள்ளது. இதனால் அப்செட்டான டெல்லி அவரை.. நீங்க இருந்தது போதும்.. உங்களுக்கு கவுரவமான எக்சிட் கொடுக்கிறோம். கிளம்பி செல்லுங்கள் என்று கூறி ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
-
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications