Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினுக்கு சட்டென போனை போட்ட பிரேமலதா? மிகப்பெரிய ட்விஸ்ட்.. உருவாகும் கூட்டணி? ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முதல்நாள் டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டத்திற்கு போட்டியாக எங்ககிட்டயும் சீப்பு இருக்கு என்பதை காட்டும் விதமாக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.

Did DMDK Premalatha call CM Stalin after the opponents INDIA meeting?

பாஜகவிற்கும் மாநில கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டும் விதமாக இந்த கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கான ஆதரவை காட்டும் விதமாக இந்த என்டிஏ கூட்டணி ஆலோசனை நடத்தப்பட்டது.

  • பாரதிய ஜனதா கட்சி
  • சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு)
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு)
  • ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (பசுபதி குமார் பராஸ் பிரிவு)
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
  • அப்னா தால் (சோனேலால்)
  • தேசிய மக்கள் கட்சி
  • தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (Neiphiu Rio)
  • அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
  • சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
  • மிசோ தேசிய முன்னணி
  • திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
  • நாகா மக்கள் முன்னணி
  • இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே)
  • அசோம் கண பரிஷத்
  • பாட்டாளி மக்கள் கட்சி
  • தமிழ் மாநில காங்கிரஸ்
  • ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
  • சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (ஓம் பிரகாஷ் ராஜ்பர்)
  • சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா)
  • மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி
  • ஜனநாயக்க ஜனதா கட்சி
  • பிரஹர் ஜனசக்தி கட்சி
  • ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா
  • ஜன் சுராஜ்ய சக்தி கட்சி
  • குக்கி மக்கள் கூட்டணி (மணிப்பூர்)
  • ஐக்கிய ஜனநாயகக் கட்சி
  • மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
  • நிஷாத் பார்ட்டி
  • அகில இந்திய என் ஆர் காங்கிரஸ்
  • இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா
  • ஜன சேனா கட்சி
  • ஹரியானா லோகித் கட்சி
  • பாரத தர்ம ஜன சேனா
  • கேரள காமராஜ் காங்கிரஸ்
  • புத்திய தமிழகம்
  • லோக் ஜனசக்தி கட்சி
  • கோர்கா தேசிய விடுதலை முன்னணி

ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டு இருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் கூட அழைக்கப்பட்ட நிலையில் தேமுதிக அழைக்கப்படவில்லை. பொதுவாக விஜயகாந்த் மீது மோடிக்கு தனிப்பட்ட அன்பு மரியாதை உண்டு.

இவர்கள் சந்திக்கும் சமயங்களில் விஜயகாந்தை மோடி கட்டி அணைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை சிறிய கட்சிகளை எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாஜக தேமுதிகவை சீண்டி கூட பார்க்கவில்லை. தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.. அவர்கள் வந்தால் நமக்கு பயன் இருப்பதை விட பிரச்சனையே இருக்கும்.

அவர்கள் தேவையில்லாத சுமைதான் என்று ரிப்போர்ட் சென்றதால் தேமுதிகவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தங்களை அழைக்காமல் அப்செட் செய்துள்ளது.

இனி அதிமுக கூட்டணிக்கு செல்வது கடினம். அவர்கள் நம்மை மதிக்கவில்லை. மூன்றாவது கூட்டணி அமைப்பது எல்லாம் வேலைக்கு ஆகாத காரியம். அதனால் திமுகவுடன் இணைந்துவிடலாம். இப்போதே திமுகவுடன் நட்பாக்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பிரேமலதா போன் செய்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனை பற்றி பிரேமலதா பேசி உள்ளாராம்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அவர் வாழ்த்து சொன்னதாக கூறப்படுகிறது. அதோடு அவர்களின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்ததற்கு வாழ்த்து சொன்னதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+