Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 ராஜாக்கள்".. மாறன்தான்.. டக்குனு ஹெச். ராஜாவை பாராட்டிய ஆ. ராசா.. டக்கென திரும்பிய திமுக.. செம்ம

முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்பி ஆ ராசா பாராட்டு தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, ஒரே ஒரு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார் என்று, திமுக எம்பி ஆ ராசா பூரித்து சொல்கிறார்.. இதை கேட்டு திமுகவினரே மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னாள் அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக இருக்கும்.. உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும்.

அதிலும் பெரியார் பற்றி இவர் பேசும் பேச்சுக்கள் அனைவரையும் ஈர்த்துவிடும்.. இந்துத்துத்துவாவுக்கு எதிராக, முழு தரவுகளுடன் பொதுமேடையில் ஆ.ராசாவைக்கும் வாதம், டெல்லியையே திரும்பி பார்க்க செய்துவிடும்..

 டேஞ்சரஸ்

டேஞ்சரஸ்

சில சமயம், ராசாவின் பேச்சுக்கள் சர்ச்சையை தாங்கியும் வலம்வரும்.. அந்தவகையில், மூத்த தலைவர் ஆ.ராசா தவிர்க்க முடியாத தலைவராக அரசியல் களத்தில் உருவாகி உள்ளார்.. அதிலும் சமீபகாலமாகவே இந்துத்துவா, மனுதர்மம், சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை ஆழ விதைத்து வருகிறார் ஆ.ராசா.. அந்தவகையில், நம் ஒன் இந்தியா தமிழ் சேனலுக்கு சிறப்பு ஒன்றை தந்துள்ளார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, "மூத்த நாடாளுமன்றவாதியாக, தற்போதுள்ள திமுகவின் இளைய எம்பிக்களின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? 2024ம் ஆண்டு தேர்தல் எதை நோக்கிய தேர்தலாக இருக்க போகிறது? என்பன போன்ற கேள்விகளை முன்வைத்தோம்.. அதற்கு ஆ.ராசா நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள்தான் இவை:

 கருணாநிதி

கருணாநிதி

"அண்ணா அளவுக்கு எழுதாதவராக, பேசாதவராக ஸ்டாலின் இருக்கலாம், ஆனால், அண்ணா, கலைஞரை போல், நீண்ட நெடிய மக்களுக்கான உழைப்பு உள்ளது.. அந்த உழைப்புக்கு முன்னால், இன்றைக்கு அவரை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தேன் கருணாநிதி (Stalin is more dangerous than karunanidhi) என்று நான்தான் முதன்முதலில் பாராட்டு சொன்னேன்.. "ஸ்டாலின், இனிமேல் வாங்க போகிற பட்டத்தைவிட, பெரியார் இருந்தால், அண்ணா இருந்தால, கலைஞர் இருந்தால், எதை விரும்பியிருப்பார்கள் என்றால், Stalin is more dangerous than karunanidhi இந்த பட்டத்தைதான் விரும்பியிருப்பார்கள்..

 முரசொலி மாறன்

முரசொலி மாறன்

உண்மையான திமுகவாதியாக, பெரியார்வாதியாக, கலைஞர்வாதியாக, அண்ணாவாதியாக, திராவிடர் இயக்க சிந்தனைவாதியாக, ஸ்டாலினை கட்டமைத்தது இந்த ஒரு வாசகம் மட்டும்தான்,.. எனக்கு தெரிந்து எச்.ராஜா செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இந்த வாசகத்தை சொன்னதுதான். இன்றைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால், இன்னும் கொஞ்சம் பயிற்சி தர வேண்டும்.. பயிற்சி தந்தால் இன்னும் நல்லா வருவாங்க.. நாங்க எல்லாம் அப்போது புதுசாக பாராளுமன்றத்துக்கு போனோம்.. எங்களை அண்ணன் முரசொலி மாறன்தான் பயிற்சி செய்தார்..

 அறிவுஜீவி + கலைஞர்

அறிவுஜீவி + கலைஞர்

இப்போதுள்ளவர்கள் திறமைசாலிகள்.. கிடங்கில் இருந்து வெளியே கொண்டு வந்து வெடிக்க வைக்க வேண்டும்.. நடைமுறைப்படுத்த வேண்டும்.. அவ்வளவுதான்.. அதுக்கான பயிற்சிகளை பெறுவதில் தகுதியானவர்கள்தான்.. திமுக நாடாளுமன்றத்தில், ஒருபோதும் சோடை போகாது.. ஏனென்றால் இது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, எப்போதுமே இது ஒரு அறிவு இயக்கம்.. எப்பவுமே கலைஞர் சொல்வார், 38 பேர் எம்பிக்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் 5 பேராவது அறிவுஜீவியாக இருக்க வேண்டும்.. இன்னொரு 5 பேர், மாநாடு போடுவதற்கு, மக்களை திரட்டுவதற்கு ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்..

 நீரோட்டம்

நீரோட்டம்

இன்னொரு 5 பேர், மதிநுட்பம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. இப்படி பிரித்து செயல்பட வேண்டும் என்று சொல்வார்.. அதுமாதிரி அறிவுப்பூர்வமான இயக்கம் இது.. வாசிப்பவர்களும் இங்கு அதிகம், படிப்பவர்களும் அதிகம், அறிவை போதிப்பவர்களும் இங்கு அதிகம்.. அப்படிப்பட்ட அறிவுபோதிப்பில், இன்றைய இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் படிக்கிறார்கள்.. திமுக எனப்து தொடர் நீரோட்டம்.. இந்த நீரோட்டத்தில் நீரும் குறையாது.. அதன் தன்மையும் குறையாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+