கிருஷ்ணசாமி விடலையே.. அண்ணாமலை அசரலையே.. அதிர்ந்த கமலாலயம்.. கவனிக்கும் திராவிட கட்சிகள்.. என்னாகுமோ
சென்னை: ஸ்ரீரங்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சின் வீரியமும், தாக்கமும் இன்னும் குறையவில்லை.. இதுகுறித்த விவாதங்களும் இன்னமும் ஓயவில்லை.
"பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் மற்ற இடங்களில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம், அறநிலையத்துறை என்ற ஒன்று பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருக்காது" என்று நேற்று அண்ணாமலை பேசியிருந்தார்.
ஆர்எஸ் பாரதி: வழக்கம்போல் அண்ணாமலையின் இந்த பேச்சும் சலசலப்பை உண்டுபண்ணிவிட்டது.. இவரது பேச்சுக்கும் தமிழகம் முழுவதும் எதிர்வினைகள் கிளம்பி உள்ளன.. இதில், முதல் நபராக திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி கொந்தளித்தார்..

"பெரியாரின் கருத்துகளை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்துபோய்விட்டார்கள். பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பேச ஆரம்பித்து விட்டார்கள். சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் வட இந்தியாவில் பெரியாரின் கருத்துகளை பரப்பும் பிரச்சார செயலாளர்களாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் உரையாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, பெரியார் தான் முதன் முதலில் சந்திர மண்டலத்தில் தண்ணீர் இருப்பதை பற்றிய அறிவை ஊட்டியவர் என்று பேசியிருக்கிறார். அதனால், அண்ணாமலையின் கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று சீறியிருந்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி: சித்தாந்த முரண்பாடு காரணமாகவும், எதிர்க்கட்சி என்பதாலும், பாஜகவை திமுக இவ்வாறு விமர்சித்திருக்கிறது என்றே எடுத்து கொண்டாலும், சொந்த கூட்டணியிலிருக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியே அண்ணாமலையின் பேச்சை விமர்சித்திருப்பது முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.
இன்று திருச்சி வந்திருந்த புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தையும் அகற்றுவோம் என்று சொன்னால் அது சரியாக இருக்கும். மாறாக, தனிப்பட்ட முறையில் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்பது எதிர் விளைவுகளை உருவாக்கும்.
கோயில் சொத்துக்கள்: கோயில் சொத்துக்களை முறையாக பராமரிப்பதில், இந்து சமய அறநிலையத் துறையிலுள்ள குறைபாடுகளைக் களைய வேண்டுமே தவிர அந்தத் துறையை களைப்பதோ அல்லது தனியாரிடம் தருவதோ கூடாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப ஜனவரிக்கு பிறகு, அரசியல் சூழல் மாறும். அதற்கேற்ப புதிய தமிழகம் கட்சியின் அரசியல் முடிவு இருக்கும்" என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
டாக்டர் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை, இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. அதேசமயம், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பவர்.. பாஜகவையும் இதுநாள்வரை விட்டுக் கொடுக்காமல் இருப்பவர்.
கூட்டணி முறிவு: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டதுமே, ஜிகே வாசனை போலவே, பாரிவேந்தரை போலவே, ஏசி சண்முகம் போலவே, ஜான் பாண்டியனை போலவே, டாக்டர் கிருஷ்ணசாமியும் அதிர்ந்தே போனார். அதிமுக, பாஜக கூட்டணி ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக, மேலிட பாஜகவை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இந்த தலைவர்கள் அனைவருமே இறங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இப்போதுகூட, இவர்கள் யாருமே தங்கள் கூட்டணி முறிவை அறிவிக்கவில்லை.. அதேபோல, "ஒருங்கிணைந்த கூட்டணிக்காக", எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் முயற்சியில், மேலிட பாஜக தலைவர்கள் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
என்னாகும்?: இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலையின் கருத்தை, விமர்சித்து, டாக்டர் கிருஷ்ணசாமி பேசியிருப்பது, அரசியல் கட்சிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது. இது வலிய விவாதத்தையும் களத்தில் உண்டுபண்ணியிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications