Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம்ம்.. ரெடி.. ‘டாப்’ தலையின் மெசேஜால் செம ஹேப்பி! தொடையைத் தட்டி இறங்கிய எடப்பாடி! இதுதானா மேட்டர்?

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை வேகப்படுத்துவதற்குப் பின்னணியில் டெல்லியில் இருந்து வந்த தகவல் ஒரு முக்கிய காரணமாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் அணியினர் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும் 'பொதுச் செயலாளர்' தேர்தலை நடத்த துணிந்து களமிறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஒருபக்கம் விடாமல் வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தாலும், டெல்லியில் இருந்து வந்த சிக்னலால் உற்சாகமாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

 பொதுச்செயலாளர் தேர்தல்

பொதுச்செயலாளர் தேர்தல்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் தொடங்கி கடந்த 9 மாத காலமாக அதிமுகவைச் சுற்றி பிரச்சனைகள் சூழ்ந்து வந்தன. ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு பொதுக்குழுவும் இந்த விவகாரத்தில் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்பட்டன. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறி மாறி சட்டப் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை அதிரடியாக அறிவித்துள்ளது அதிமுக தலைமைக் கழகம்.

 விதி 20 (அ) பிரிவு 2

விதி 20 (அ) பிரிவு 2

மார்ச் 18 காலை 10 மணி முதல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. மார்ச் 19 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து, வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறுதல் மார்ச் 21ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குப்பதிவு மார்ச் 26ஆம் தேதியும், மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ளவாறு கழகப் பொதுச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழகப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அன்றே முடிவு செய்த எடப்பாடி

அன்றே முடிவு செய்த எடப்பாடி

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது என கடந்த மார்ச் 9ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போதே முடிவு செய்தது ஈபிஎஸ் அணி. அதன்படியே அதிமுக உறுப்பினர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் படமும், கையெழுத்தும் இல்லாமல் அதிமுக உறுப்பினர் அட்டைகளை முன்பே தயாரித்து வைத்திருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு காரணமாக விநியோகிக்காமல் அதிமுக அலுவலகத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாவட்ட வாரியாக விநியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

 மீண்டும் கார்டு

மீண்டும் கார்டு

இந்த புதிய உறுப்பினர் அட்டைகள் அதிமுகவின் அத்தனை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவில்லை. மாவட்டம், நகரம், ஒன்றியம், கிளைக்கழகம் வரை பொறுப்பில் இருக்கும் ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுக்கு மட்டுமே தற்போது உறுப்பினர் அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த உறுப்பினர் அட்டைகள் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டே வழங்கப்படுகிறது. இந்த பொதுச் செயலாளர் தேர்தல் முடிந்த பிறகு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் மீண்டும் புதிதாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும் என்கிறது ஈபிஎஸ் வட்டாரம்.

 ஓபிஎஸ் ஏவும் அஸதிரம்

ஓபிஎஸ் ஏவும் அஸதிரம்

எடப்பாடி பழனிசாமி இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது ஒருபுறம் என்றால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் விடாமல் சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இப்படியாக விடாமல் அஸ்திரங்களை ஏவி வருகிறார் ஓபிஎஸ்.

 ஓபிஎஸ் தாக்குப்பிடிப்பாரா

ஓபிஎஸ் தாக்குப்பிடிப்பாரா

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். எனவே நீதிமன்றத்தின் மூலம் அதிமுகவில் தனக்கான இடத்தை பிடித்து விட வேண்டும் என ஓபிஎஸ் தீவிரம் காட்டி வருவது தெரிகிறது. இதற்கிடையில் டெல்லியின் அதிகார மட்டம் தன்னை கைவிட்டு விட்டதாக ஓபிஎஸ் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ்ஸின் சட்டப் போராட்டத்தில் வெற்றி கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 அறிவிப்புக்கு பின்னணி

அறிவிப்புக்கு பின்னணி

இதற்கிடையில் தான் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அணி. எடப்பாடி பழனிசாமியின் இந்த உடனடி அறிவிப்புக்குப் பின்னணியில் டெல்லியில் இருந்து வந்த முக்கியமான சிக்னலும் காரணமாம். கடந்த மார்ச் 15ஆம் தேதி ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பி தம்பிதுரை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம், அதிமுகவின் தற்போதைய நடவடிக்கைகள், எடப்பாடி பழனிசாமியின் பலம் அதிகரித்து வருவது பற்றியெல்லாம் தம்பிதுரை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தாராம்.

 பாசிட்டிவ் சிக்னல்

பாசிட்டிவ் சிக்னல்

இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை தம்பிதுரை எடப்பாடி பழனிசாமிக்குச் சொன்னதும் ஈபிஎஸ் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். டெல்லியில் இருந்து வந்த தகவல்கள் தனக்கு சாதகமாக இருப்பதைக் கண்டு, இப்போதே தேர்தலை நடத்தி முடித்து விடலாம், அது அடுத்து ஓபிஎஸ் என்ன வழக்கு தொடர்ந்தாலும், கோர்ட்டிலும் தனக்கு பலம் கொடுக்கும் என முடிவெடுத்தாராம் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்தே பொதுச் செயலாளர் தேர்தல் வேலைகளை வேகப்படுத்தினார் ஈபிஎஸ் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+