ஸ்டாலின் போல் எடப்பாடி சைக்கிள் ஓட்டுவாரா? பதவி விலகத்தயார்! திமுக எம்.எல்.ஏவின் விபரீத சவால்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியால் சைக்கிள் ஓட்ட முடியுமா? என திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது. இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பங்கேற்ற திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் தொண்டர்கள் முன்பாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் "நேற்று இதே இடத்தில் தண்ணீர் பந்தல் திறந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியுள்ளார். முதலமைச்சர் உடற்பயிற்சி செய்வதையும், சைக்கிள் ஓட்டுவதையும் வைத்து தரக்குறைவாக விமர்சனம் செய்த குப்பனை கண்டிக்கிறேன். ஒரு நாளைக்கு 10 கீலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டும் முதலமைச்சர் ஸ்டாலினை போல எடப்பாடியால் சைக்கிள் ஓட்ட முடியுமா?

10 கிலோ மீட்டர் அல்ல 4 கிலோ மீட்டர் வரை குப்பன் சைக்கிள் ஓட்டினால் நான் பதவி விலகிக் கொள்கிறேன். மேலும் திருவொற்றியூர் 7வது வார்டில் குப்பனின் மகன் கார்த்திக் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் இருக்கும் வரை திருவொற்றியூரில் குப்பனால் வெற்றிபெற முடியாது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications