தங்கம் உண்மையில் பூமியில் இருந்துதான் உருவாகிறதா? முதலில் எங்கே உருவானது.. உடைந்த மர்மம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் எவ்வளவுதான் விலை கூடினாலும் அதன் மீதான ஈர்ப்பு மட்டும் மக்களிடையே குறைவதே இல்லை. பூமியில் கிடைக்க கூடிய உலோகங்களில் தங்கத்திற்கு மட்டும் ஏன் இத்தனை மவுசு? தங்கம் உண்மையில் பூமியில் இருந்துதான் உருவாகிறதா? முதன் முதலில் தங்கம் உருவானது எப்படி என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

இது குறித்து விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த நிலையில், இந்த மர்மத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. தங்கத்தை பொறுத்தவரை அது பூமியின் தனிமம் இல்லை.. அது விண்வெளியில் ஏற்பட்ட ஒரு பிரமாண்ட வெடிப்புகளினால் தோன்றிய ஒன்று என்பது விஞ்ஞானிகள் கருத்தாக உள்ளது.

Did Gold Really Form on Earth Scientists Reveal Where Gold First Came From

விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

அதாவது, தங்கம் இயற்கையாகவே பூமியில் இருந்து தோன்றவில்லை. இது மிகப் பெரிய விண்வெளி வெடிப்புகளில் உருவாகியிருக்க கூடும். நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதுதல், அதனால் உருவாகும் கிலோநோவா வெடிப்பு ஏற்படுதல். அதில் நடைபெறும் ஆர்-பிராசஸ் சூழ்நிலையில்தான் தங்கம், பிளாட்டினம் போன்ற கனமான உலோகங்கள் உருவாகும் என்பதே விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறும் கருத்தாக உள்ளது.

விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஆய்வறிக்கை ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இயற்பியல் தொடர்பான ஆய்வுகளை வெளியிடும் நேச்சர் சர்வதேச அறிவியல் இதழில் வெளியான அறிக்கையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் விண்வெளியில் நடைபெற்ற ஜி ஆர் பி 230307 என்ற காமா கதிர் வெடிப்பு ஆய்வு செய்யப்பட்டது.

முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக

இதில் தான் முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிய போது, கிலோ நோவா வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான உலோகங்கள் உருவாகியிருப்பதை விஞ்ஞானிகள் ஆதாரங்களுடன் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்கு வலு சேர்க்கும் விதமாக தற்போது அமெரிக்காவில் உள்ள டென்னசி பல்கலைக் கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, அணுக்கரு அளவில் தங்கம் எப்படி உருவானது என்பது விளக்கப்பட்டுள்ளது. ரேபிட் நியூட்ரான் கேப்சர் எனப்படும் அதிவேக நியூட்ரான் பிணைப்பு வினை மூலமே தங்கம் உருவாகிறது என்பதை அணுக் கரு இயற்பியலாளர்கள் 100 சதவீதம் உறுதிபடுத்தி உள்ளனர்.

பூமிக்கு எப்படி தங்கம் வந்தது?

விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், "சாதாரண நட்சத்திரங்களால் இரும்பு வரை மட்டுமே உருவாக்க முடியும். தங்கம் போன்ற கனமான உலோகங்களை உருவாக்க அதீத வெப்பம் மற்றும் அழுத்தம் தேவை. அப்படி என்றால் பூமிக்கு தங்கம் எப்படி வந்தது என்ற கேள்வி வரும்.

சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமி உருவாகும் கால கட்டத்தில் விண்வெளியில் இப்படியான ஒரு மோதல் நடைபெற்று இருக்கும். அப்போது சிதறிய தங்க துகள்கள் பூமியின் மீது விழுந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அப்படி பூமியின் மீது படிந்த தங்கமே இன்று சுரங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கம் என்பது அவர்கள் வாதமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+