Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜெயலலிதா கால்கள்".. முரட்டு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்.. அடித்து சொல்லும் நக்கீரன் கோபால்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவிற்கு கால்கள் இல்லை என்று வெளியான செய்தி பொய் என்று ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவிற்கு கால்கள் நீக்கப்பட்டது உண்மைதான் என்று நக்கீரன் கோபால் அடித்து சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு கால்கள் இருந்ததா என்று நிலவி வந்த சந்தேகத்திற்கு ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், மறைந்த முதல்வரின் விரல்களோ அல்லது கால்களோ துண்டிக்கப்பட்டனவா என்று அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அதற்காக உணர்ச்சிவசப்பட்டு பதில்களை அளித்தார்.

அவர் உணர்ச்சிவசப்பட்டு, 27.09.2016 - அன்று மறைந்த முதல்வர் காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, மருத்துவமனையில் தனது இருக்கையிலிருந்தபடியே அறிக்கையைக் கூற, தான் மறைந்த முதல்வரின் கால்களுக்கு முன்னர் அமர்ந்திருந்ததாகவும், இக்கிசுகிசுக்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் கூறினார்.

அறிக்கை என்ன சொல்கிறது

அறிக்கை என்ன சொல்கிறது

மேலும், டாக்டர் சுதா சேஷையன், எம்பாமிங் செய்யும் போது, கால்கள் துண்டிக்கப்பட்டதா என்பதை தான் கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். சம்பிரதாய முறைப்படி அவரது இரு கால்கட்டை விரல்களையும் துணியால் கட்டியதாக C.W-26 எம். ஐயப்பன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ராம் மோகன் ராவின் சாட்சியங்களை ஆராய்ந்த பிறகு, C.W.14 - டாக்டர் கிருஷ்ணப்ரியா C.W.17 - டாக்டர். சிவக்குமார், C.W.26 - ஐயப்பன், C.W.94 - டாக்டர். மீரா கிருஷ்ணப்ரியா, C.W.104 - டாக்டர். ரேமண்ட் டோமினிக் சேவியோ மற்றும் C.W.106 - டாக்டர் பாபு குருவில்லா ஆபிரகாம் ஆகியோரின் கூற்றுப்படியும் மற்றும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படியும், மறைந்த முதல்வரின் கால்கள் மற்றும் கால்விரல்கள் அவரது இறுதி மூச்சு வரை சரியாகவும், உள்ளவாறே இருந்தன என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.

சந்தேகம்

சந்தேகம்

மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து, முழங்காலுக்குக் கீழே மறைந்த முதல்வரின் கால்கள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லையென்று என்று அவை உடனடியாக நிராகரிக்கப்படுகின்றன, என்று ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஆணைய அறிக்கையில் கால்கள் இருப்பதாக கூறும் நிலையில், நக்கீரன் கோபால் இதில் வேறு விதமான சந்தேங்களை எழுப்பி உள்ளார். அதன்படி ஜெயலலிதா உடலில் எம்பாமிங் (embalming) செய்தவர் என்ற முறையில் டாக்டர் சுதா சேஷையன், ஜெயலலிதா முகத்தில் இருந்ததாக கூறப்படும் 3 துளைகள் பற்றி விளக்கி உள்ளார். அதில், ஊடகங்களில் பரவிய வதந்திகளைப் போல, மறைந்த முதல்வரின் முகத்தில் துளைகள் இல்லை.

சந்தேகம் என்ன?

சந்தேகம் என்ன?

உண்மையாகவே உடலில் துளைகள் இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும் போது, துளைகள் வழியாக உடல் திரவ ஓட்டம் இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆகவே, அவரைப் பொறுத்தவரை, உடல் ரீதியான வன்முறைக்கான எந்தத் தடயமும் காணப்படவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் அதே டாக்டர் சுதா சேஷையன், எம்பாமிங் செய்யும் போது, கால்கள் துண்டிக்கப்பட்டதா என்பதை தான் கவனிக்கவில்லை என்று டாக்டர் சுதா சேஷையன் கூறியுள்ளார். இதைத்தான் தற்போது நக்கீரன் கோபால் தனது வீடியோவில் கேள்வி எழுப்பி உள்ளார்,

நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபால்

நக்கீரன் கோபால் தனது வீடியோவில், ஜெயலலிதாவின் முகத்தில் இருக்கும் 3 புள்ளிகளை கவனித்த டாக்டர் சுதா எப்படி இரண்டு பெரிய கால்களை கவனிக்கவில்லை என்று கூற முடியும். முகத்தில் உள்ள மூன்று சின்ன புள்ளிகளை கவனித்தவர், முரட்டு தனமான இரண்டு கால்களை கவனிக்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும். ஜெயலலிதா ஆஜான பாகுவான ஆள். அவரின் கால்களை எப்படி கவனிக்க முடியாமல் போகும்.

 கால்கள்

கால்கள்

ஒன்று கால்கள் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். அது எப்படி கவனிக்க முடியாது என்று சொல்ல முடியும். நான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன், ஜெயலலிதாவிற்கு கால் இல்லை என்று. இவர்கள் முழு பூசணிக்காவை அல்ல முரட்டு பூசணிக்காவை சோற்றில் மறைக்கிறார்கள். நான் யாருக்கும் எதிரி கிடையாது. ஆனால் இதில் உண்மை வெளியே வர வேண்டும்.

உறுதியாக சொல்லி நக்கீரன் கோபால்

உறுதியாக சொல்லி நக்கீரன் கோபால்

3 புள்ளிக்கு விளக்கம் கொடுத்த ஒரு படித்த டாக்டர் எப்படி இரண்டு கால்களை பார்க்காமல் போனார். இதில் ஒவ்வொருவருத்தரும் அறியாமல் பொய் சொல்கிறார்கள். இப்பவும் நான் உறுதியாக சொல்கிறேன். கால்களை எடுத்துவிட்டனர். நான் அடித்து சொல்கிறேன் கால்களை எடுத்துவிட்டனர். ஆறுமுகசாமி நீதியரசர். அவர் சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே சொல்ல முடியும். சாட்சியங்களை தாண்டி முடிவு எடுக்க முடியாது. ஆனால் உண்மையில் கால்கள் இல்லை.

 கால்கள் இல்லை

கால்கள் இல்லை

ஜெயலலிதாவிற்கு கால் இருப்பதாக வெளியான வீடியோ பழையது. அவருக்கு கால் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ அது. சவப்பெட்டியில் இருந்த ஜெயலலிதாவின் உடலில் கால்கள் இல்லை. அவரின் இறுதி ஊர்வலத்தில், கால்கள் இல்லை என்பது தெளிவாக புகைப்பட ஆதாரங்களோடு உள்ளது. இதற்கு பின் பூதாகரமான தவறுகள் உள்ளன. அவரின் தொடைக்கு கீழ் எதுவும் இல்லை என்பது புகைப்படங்களில் தெரிகிறது.

புகைப்படம்

புகைப்படம்

அவரின் உண்மையான உயரத்தை விட குறைவான உயரத்தில்தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் இருந்தார். மாலை கூட அவரின் தொடையோடு கீழே இறங்கிவிட்டது. தொடைக்கு கீழ் எதுவும் இல்லை என்பதால் அவருக்கு போற்றப்பட்டு இருந்த மாலையும் கீழே விழுந்துவிட்டது. தொடைக்கு கீழ் அவருக்கு இரண்டு காலும் இல்லை என்பது உண்மை. இதைத்தான் நான் ஆணித்தரமாக சொல்லி வருகிறேன், என்று நக்கீரன் கோபல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+