Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1+1.. "உதயசூரியனுடன்" இணையும் புது கட்சி? திமுக கூட்டணி ஓகே ஆயிடுச்சா? "டிட்டோ வைகோ".. அப்படி கமல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம்" என்று அன்று மா.செ. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருந்த நிலையில், ஒருவேளை அது கமலாக இருக்குமோ? விஜயகாந்த்தாக இருக்குமோ? அன்புமணியாக இருக்குமோ? என்றெல்லாம் யூகங்கள் வெடித்து கிளம்பின.. அந்தவகையில் மநீம தொடர்பாகவும் சில தகவல்கள் கசியவே செய்தது.. அந்த தகவல்கள்தான் இப்போது விஸ்வரூபமெடுத்து வருகின்றன.

சமீபநாட்களாகவே கமல்ஹாசனின் அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் இணைய போவதாவும் செய்திகள் கசிந்து வருகின்றன.
திமுக கூட்டணி தற்சமயம் வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது..

Did Kamalhasan not join the DMK alliance and what did mnm executives say about the alliance

மநீம: அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் திமுகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. காரணம், தற்போதுள்ள கூட்டணியை தவிர, வேறு சில கட்சிகளையும் இணைத்துதான், பாஜகவை எதிர்கொள்ள முடியும் என்று திமுக கணக்கு போடுகிறது.. எனவே, எப்படியாவது கமலை சமாதானம் செய்து, திமுக கூட்டணிக்குள் அழைத்து வர வேண்டும் என்ற அசைண்மென்ட் உதயநிதிக்கு தரப்பட்டதாகவும் கூறப்பட்டன..

ஒருகட்டத்தில் சீட் மற்றும் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்த தகவல்களும் வெளியாக ஆரம்பித்தன.. குறிப்பாக, 1+1 சீட்களை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்வது அல்லது 2 மக்களவை தொகுதிகளை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்ய திமுக முடிவெடுத்துள்ளதாகவும், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே கமலையும் களமிறக்கலாம், அதிலும் ராமநாதபுரம் தொகுதியை கமலுக்கு ஒதுக்க திமுக விரும்புவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன..

மவுரியா: அதுமட்டுமல்ல, தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளையே பெற கமல் விருப்பம் காட்டுவதாகவும், இந்த தொகுதிகளில் ஒன்றில் கமலும், இன்னொரு தொகுதியில், கட்சியின் துணை தலைவர் மவுரியாவும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் கசிந்தன.. ஆனால், இவைகள் எதுவுமே இந்த நிமிஷம்வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது வேறு விஷயம். இப்படிப்பட்ட சூழலில்தான், ராகுல்காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தந்து, நேரடியாகவே அதில் பங்கேற்றிருந்தார் கமல்.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால், கமலும், திமுக கூட்டணியிலேயே பயணிப்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.

காரணம், கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கமல் கை கோர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. இதற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில், ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, கமல், இளங்கோவனுக்கு ஆதரித்து தந்து, பிரச்சாரமும் செய்திருந்தார். அதேபோல, இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியேற்று முடித்ததுமே, தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட ஈவிகேஎஸ், முதல்வேலையாக, நடிகர் கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்து பேசினார்..

Did Kamalhasan not join the DMK alliance and what did mnm executives say about the alliance

இளங்கோவன் சபாஷ் : கிட்டத்தட்ட இவர்கள் 30 நிமிடம் அப்போது பேசியிருக்கிறார்கள்.. அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக நீங்கள் இணைந்து விடலாமே?" என்று இளங்கோவன் கேட்க, "காலங்கள் இருக்கிறதே.. பார்க்கலாம்" என்று பொதுவாக சொல்லியிருக்கிறார் கமல். ஆக, காங்கிரசுடன் கமல் நெருக்கம் காட்டி வந்தாலும், திமுகவுடன் வெளிப்படையான நெருக்கத்தை காட்டவில்லை.. ஆனால், தமிழக பட்ஜெட்டை வரவேற்றிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இப்போது விஷயம் என்னவென்றால், திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் தருவதானால், மாற்று முடிவை எடுக்கலாம் என்று கமலுக்கு அக்கட்சி நிர்வாகிகள் நெருக்கடி தந்துவருகிறார்களாம். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், கடந்த 2019 தேர்தலில், 3.7 சதவீதம் மநீம பெற்றுள்ளது.. 2021 சட்டசபை தேர்தலில் 3.2 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது.. அப்படியானால், திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுகவை விட ஓட்டு சதவீதம் வைத்துள்ள மநீம கட்சிக்கு ஒரு தொகுதி என்பதை, எப்படி ஏற்க முடியும்? அதனால், மாற்று முடிவை எடுக்கலாம் என்று கமலிடம் எடுத்து சொல்லி வருகிறார்களாம்.

தென்சென்னை: தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார் போன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றுள்ளோம்.. அதனால், இந்த 4 தொகுதிகளில் ஒன்று, தெற்கு அல்லது கொங்கு மண்டலத்தில் ஒன்று என 2 தொகுதிகள் கிடைத்தால், திமுக கூட்டணியில் இணையலாம் என்றும் கமலிடம் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம்.. இதற்கெல்லாம் கமல் என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், 1 + 1 என்ற பார்முலாவுக்கு திமுகவுக்கு ஓகே சொல்லும் என்கிறார்கள்.

Did Kamalhasan not join the DMK alliance and what did mnm executives say about the alliance

டிட்டோ வைகோ: அதாவது கடந்த தேர்தலில் வைகோவுக்கும் இதே பார்முலாவைதான் திமுக கையில் எடுத்தது.. 1 +1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழழும் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்தது.. அந்த வகையில், கமலையும், ராஜ்யசபாவுக்கு அனுப்பி, பிரச்சாரத்துக்கும் அனுப்ப திமுக பிளான் போட்டு வருவதாக கூறுகிறார்கள்.. இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை என்றாலும், கமல் இணைந்தால், அது திமுக கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.. காரணம், நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குகளை கமல் வெகுவாக அள்ளுவார் என்பதே திமுக போடும் கணக்கு.. ஆனால், 2 சீட் என்றால் திமுக என்ன சொல்ல போகிறது? என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+