Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த 1 சொல்".. எடப்பாடியை விடுங்க.. கருணாநிதி சொல்லலயா.. நாக்கை அடக்குங்க.. வரிந்து கட்டிய பிரபலம்

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் பதிவாகி உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் "ஆம்பள" பேச்சு விவகாரத்தில் எழுந்த மோதல், வலுத்துக்கொண்டு வருகிறது. இதுகுறித்த விவாதங்களும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்.. நேரடியாகவும், துணிச்சலாகவும் எதிர்தரப்பினரை கேள்விகளால் துளைக்க கூடியவர்..

செய்தியாளர்கள் சந்திப்பு என்றாலும்கூட, தன் ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். சட்டசபையில் கொடநாடு விவகாரம் குறித்து திமுக தரப்பு கூறிய புகாரையடுத்து, அதே கோபத்துடன் சட்டசபைக்கு வெளியே டென்ஷன் கலந்த வார்த்தைகளுடன் எடப்பாடி தந்த பேட்டியை தமிழகம் கண்டது...

 தடித்த சொல்

தடித்த சொல்

அதேபோல, ஓபிஎஸ் பற்றின கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, பலசமயம், அதை இயல்பாக பேசினாலும், சில சமயம், "பச்சோந்தி", "மோசமானவர்", "தரம்தாழ்ந்தவர்" போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி ஓபிஎஸ்ஸை விமர்சித்ததையும் மறுக்கமுடியாது.. முதல்வராக பதவியேற்றபோதும்சரி, எதிர்க்கட்சியாக பதவியில் உள்ளபோதும்சரி, இத்தனை வருட காலத்தில் திமுகவை தடித்த வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது கிடையாது.. ஆனால், ஈரோடு பிரச்சாரத்தில் நேற்று முன்தினம் பேசிய வார்த்தைகளின் எதிரொலி இன்னமும் அடங்கவில்லை.. எடப்பாடி இவ்வாறு பேசியது சரிதானா? என்ற விமர்சனங்களும், கேள்விகளும், விவாதங்களும் கிளம்பி உள்ளன.

 மீசை வச்ச ஆம்பளை

மீசை வச்ச ஆம்பளை

நீ சரியான ஆம்பளையா இருந்தால்.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தால்.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தால்.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி.. உங்களுக்கு திராணி கிடையாது. தெம்பு கிடையாது.. அதிமுகவை நேரடியாக சந்திக்கும் திறமை கிடையாது. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி... ஏழைக்கு நீ காசு கொடுத்து கூட்டி வந்து தங்க வைத்திருக்கிறாயே, அவர்களை வைத்து வாக்கு போட சொல்கிறாயே.. அதிமுகவை எதிர்க்கும் திறன் உங்களுக்கு ஏன் இல்லை என்று பொதுமக்கள் முன்னிலையில், பிரச்சாரத்தில் கேட்டிருந்தார்.

சகஜமப்பா

சகஜமப்பா

இதெல்லாம் பேசியது எடப்பாடிதானா? என்ற சந்தேகம் மொத்த தமிழக கட்சிகளுக்குள்ளும் எழுந்து வருகிறது.. காரணம், இப்படியெல்லாம் கடந்த ஆட்சியில் பேசிக் கொண்டிருந்தவர் ராஜேந்திர பாலாஜிதான்.. "நீ ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வந்து பாரு" என்று சவால் விட்டு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார் ராஜேந்திர பாலாஜி.. ஆனால், அவரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூப்பிட்டு கண்டிக்கவேயில்லை என்று திமுக தரப்பில் விமர்சனங்களும் எழுந்தன.. ஆனால், இன்று எடப்பாடியே இப்படி பேசியிருக்கிறாரே என்றுதான் பலரும் ஆச்சரியப்பட்டு போயுள்ளனராம்.

 ஹார்ஷ் வார்த்தை

ஹார்ஷ் வார்த்தை

அதுமட்டுமல்ல, கருத்தியலை கருத்தியலாக கையாள வேண்டுமேதவிர, அரசியலை அரசியலாக பார்க்க வேண்டுமே தவிர, இப்படியெல்லாமா பேசுவது? தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவது எதற்குமே தீர்வு கிடையாது என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடைத்தேர்தலில் வந்துள்ள தோல்வி பயத்தையே இதெல்லாம் காட்டுகிறது என்றும் ஒருசாரார் பேசி வருகிறார்கள்.. மற்றொரு தரப்பினரோ, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா? என்ற ரேஞ்சில் எடப்பாடி பேச்சுக்கு ஆதரவையும் தந்து வருகிறார்கள்.. அந்தவகையில், நேற்றைய தினம், பிரபல திரைப்பட டைரக்டர், எடப்பாடியின் பேச்சுக்கு தன்னுடைய வலிய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

ஆம்பளையா

ஆம்பளையா

ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல், என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.. நவீனின் இந்த கேள்விக்கு திமுக தரப்பில் ஆதரவும், அதிமுக தரப்பில் கொந்தளிப்புமாய் கமெண்ட்கள் பதிவாகின.. இந்நிலையில், அரசியல் விமர்சகர் அப்சரா நவீனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 பேப்பர் கட்டிங்

பேப்பர் கட்டிங்

"இந்திரா காந்தி பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? எங்கள் கட்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். திமுகவில் பெண்கள் முதலமைச்சரின் காரில் தொங்குகிறார்கள் அல்லது Raja போன்ற மூத்தவர்களால் விபச்சாரிகள் என்று அவமதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் அப்சரா.. அத்துடன் ஒரு பேப்பர் கட்டிங்கையும் தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்திருக்கிறார்.. அதில், அன்று இந்திராகாந்தி குறித்து கருணாநிதி விமர்சித்த செய்திகளை ஆதாரமாக இணைத்திருந்தார். இதை பார்த்த நவீன், "எடப்பாடியார் மட்டுமல்ல, பொதுமேடைகளில் திரைப்படங்களில் வரும் இதுபோன்ற வாசகங்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக, தங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது தோழர்" என்று பதிவிட்டுள்ளார்..

 ஷேரிங் அப்சரா

ஷேரிங் அப்சரா

இதற்கு அப்சரா, அதிகாரம் வரும்போது பொறுப்பும் அதற்கு ஏற்பவும் வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதிமுகவில் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளன. அதிமுக தலைவர்கள் பெண்களுக்கு எதிராக எந்த விதமான தரக்குறைவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. பேசியிருந்தால் கண்டிக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி பேசியதை மு.க.ஸ்டாலினும் பேசியிருக்கிறார் என்று கூறியுள்ளார்... இந்த ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆக, எடப்பாடி பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், கருணாநிதி, ஸ்டாலினும்கூட இப்படி பேசியிருக்கிறார்கள் என்று அதற்கான ஆதாரத்தை அதிமுக தரப்பு தெரிவிப்பதும் என சோஷியல் மீடியாவே பரபரபத்து காணப்படுகிறது.

பேப்பர் கட்டிங்

பேப்பர் கட்டிங்

"இந்திரா காந்தி பற்றி கருணாநிதி என்ன சொன்னார்? எங்கள் கட்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். திமுகவில் பெண்கள் முதலமைச்சரின் காரில் தொங்குகிறார்கள் அல்லது Raja போன்ற மூத்தவர்களால் விபச்சாரிகள் என்று அவமதிக்கப்படுகிறார்கள். எனவே உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் அப்சரா.. அத்துடன் ஒரு பேப்பர் கட்டிங்கையும் தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்திருக்கிறார்.. அதில், அன்று இந்திராகாந்தி குறித்து கருணாநிதி விமர்சித்து, அதுகுறித்து வெளியாகி இருந்த செய்திகளை ஆதாரமாக இணைத்திருந்தார்.

ஷேரிங் அப்சரா

ஷேரிங் அப்சரா

இதை பார்த்த நவீன், "எடப்பாடியார் மட்டுமல்ல, பொதுமேடைகளில் திரைப்படங்களில் வரும் இதுபோன்ற வாசகங்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக, தங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது தோழர்" என்று பதிவிட்டுள்ளார்.. அதாவது அப்சராவுக்கே நேரடியாக அந்த பதிலை நவீன் பதிவிட்டிருந்தார்.. உடனே இதற்கும் அப்சரா விரைந்து வந்து பதில் தந்துள்ளார். "அதிகாரம் வரும்போது பொறுப்பும் அதற்கு ஏற்பவும் வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதிமுகவில் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளன. அதிமுக தலைவர்கள் பெண்களுக்கு எதிராக எந்த விதமான தரக்குறைவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. பேசியிருந்தால் கண்டிக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி பேசியதை மு.க.ஸ்டாலினும் பேசியிருக்கிறார்" என்று கூறியுள்ளார்...

ஜாஸ்தி தோழர்

ஜாஸ்தி தோழர்

இப்படி திமுக & அதிமுக ஆதரவாளர்களும், மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வரும் ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. எடப்பாடி பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், கருணாநிதி, ஸ்டாலினும் இதற்கு முன்பு இப்படி பேசியிருக்கிறார்கள் என்று அதற்கான ஆதாரத்தை அதிமுக தரப்பு தெரிவிப்பதும் என சோஷியல் மீடியாவே பரபரபத்து காணப்படுகிறது... இந்த ட்வீட்கள் மீது விவாதங்களும் வெடித்துள்ளன.. இதற்கு நடுவில், தலைவர்கள் யாராக இருந்தாலும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதே தவறு என்று இணையவாசிகள் பொதுவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+