தமிழக மின்சார துறையில் 65000 காலிப்பணியிடங்கள்! ஒருவர் 10 பேரின் வேலையை செய்கிறார்! நிர்மல் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சாரத் துறையில் 65,921 காலிப்பணியிடங்கள் இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் தற்போது 2001 ஆம் ஆண்டு முதல் மின்சாரத் துறையில் நிதி, செலவினங்கள் குறித்தும் தனியே ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

tamil nadu electricity

அவர் கூறியிருப்பதாவது: 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வருவாய் 59,084 கோடி, தெலவு 67,439 கோடி, வருமான பற்றாக்குறை 8,355 ஆகும்.

அது போல் 2006- 2011-ஆம் ஆண்டு 92,737 கோடி வருவாயும் ரூ 1,28,200 செலவும் இருந்தது. அப்போது வருவாய் பற்றாக்குறை 35,463 ஆக இருந்தது.

அது போல் 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு 1,92,971 கோடியும் செலவு 2,49,332 கோடியும் இருந்தது. அப்போது வருவாய் பற்றாக்குறை 56,361 கோடியாகும்.

2016- 2021 ஆம் ஆண்டு வருவாய் 3,20,140 கோடியாகவும் 3,78,674 கோடியாகவும் இருந்தது. வருவாய் பற்றாக்குறை 58,534 கோடியாகும். திமுக ஆட்சியில் வருவாய் 4,97,996 கோடியாகவும் செலவு 5,32,443 கோடியாகவும் இருந்தது. வருவாய் பற்றாக்குறை 34,447 கோடியாகும்.

மின்வாரியத்தில் மொத்த மின் ஊழியர்களின் தேவை 1,40,635 ஆக உள்ளது. அதில் பணியில் இருப்பவர்கள் 74,174 ஆகும். காலிப்பணியிடங்கள் 65,921 ஆகும். இந்த ஆண்டு 20,449 பேரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 16,782 பேர் ஓய்வு பெறவுள்ளனர்.

மின் தேவை அதிகரிக்கும் மின் உற்பத்தி கட்டமைப்பு இல்லை. ஒரு நபர் 10 பேரின் வேலையை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4,47,603 மின்மாற்றிகள் உள்ளன. அவற்றில் 25 ஆண்டுகளை கடந்த மின்மாற்றிகள் 42,808 இருக்கிறது. 25 ஆண்டுகளை கடந்து 184 துணை மின் நிலையங்கள் உள்ளன. 8310 கோடியில் துணை மின் நிலையங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

வரும் காலங்களில் 1.5 லட்சம் மின்மாற்றிகள் புதுப்பிக்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் உப்பூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்ந்து கிடப்பில் இருக்கிறது.

ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த கடந்த 25 ஆண்டுகளில் எந்தவித கவனமும் செலுத்தவில்லை. மாறாக கொள்முதலில் எந்தவித கவனமும் செலுத்தவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட மின் தேவை 5 மடங்கு அதிகரித்து உள்ளது. எந்த பெரிய அளவிலான மின்னுற்பத்தி திட்டத்தையும் அரசு செய்யவில்லை.

புதிதாக தொடங்கப்பட்ட மின்மாற்றிகள் 60 ஆயிரம் ஆகும். இவற்றிற்கு மொத்தம் 21,512 கோடி செலவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். 10 ஆண்டுகளில் 20,240 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே பணியில் எடுக்கப்பட்டுள்ளனர். உச்சபட்ச மின் தேவை 20,321 மெகாவாட்டாக உள்ளது. மாநிலத்தின் மின்சார தேவை 3495 மெகாவாட்டாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+