திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை.. "அப்பாவை காணோம்" என்ற முதல்வர் விஜய் பேச்சிற்கும் ஸ்டாலின் பதிலடி!
திருவாரூர்: திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை என்று மக்கள் சொல்வதை பரிசீலனை செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் இருக்கிறேன் என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் அப்பாவை காணோம் என்று பேசிய முதல்வர் விஜய்க்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், நாட்டில் இன்று ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு பக்கம் மின்வெட்டு.. மறுபக்கம் மெட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. திமுக ஆட்சியின் போது குறித்த மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இதனையெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமாக சட்டசபையில் பேசினார். அதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். ஆனால் முதல்வர் விஜய், உங்க அப்பாவை காணோம் என்று பதில் அளித்துள்ளார். அப்பாவை அங்க தேடாதீர்கள்.. இந்த ஸ்டாலின் மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன்.
நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்.. மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக நிற்பேன். சட்டசபையில் நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் உள்ளேன். நான் அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகளாகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளும் மக்களோடு மக்களாகவே இருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றுபவர்களே திமுகவினர்.
கடந்த 5 ஆண்டுகளில் நான் செய்ததை போல் வேறு யாரும் ஆய்வில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். கோட்டையில் உள்ள மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கோப்புகளில் என்னுடைய கையெழுத்து இருக்கும். அங்கு ஸ்டாலின் தான் இருக்கிறான். அதனால் கோட்டையிலும் இருக்கிறேன்..
மகளிர் உரிமைத் தொகை இருக்கும் வரை ஸ்டாலின் இருப்பான். திமுக கூட்டணியில் இருந்து யாரையும் நாம் வெளியேற்றவில்லை. அவர்களாகவே வெளியேறுகிறார்கள். நாம் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை.. ஆனால் மக்கள் திமுகவுக்கு கூட்டணியே தேவையில்லை என்கிறார்கள். விரைவில் அதனை நிச்சயம் பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications