பெண்களை எம்எல்ஏ ஆக்குவோம்.. "ரத்னவேல் பாசறை".. மாமன்னன் பகத் பாசிலை கொண்டாடுவது சரியா? புது சர்ச்சை
சென்னை: மாமன்னன் படத்தின் பல்வேறு காட்சிகள், கதாபாத்திரங்கள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் புதிய காட்சி ஒன்றும் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ளது மாமன்னன் படம். ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், தனித்தொகுதி அரசியல், இடஒதுக்கீடு என்று பல்வேறு அரசியல்களை வலுவாக இந்த படம் பேசுகிறது.

தலித் ஒருவர் தனித்தொகுதியில் எம்எல்ஏ ஆனாலும் கூட அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை, எம்எல்ஏ ஆனாலும் கூட ஒரு தலித் ஜாதி ரீதியாக எப்படி எல்லாம் ஒடுக்கப்படுகிறார் என்பதை படம் பிடித்து காட்டி உள்ளது மாமன்னன். இந்த படத்தின் பல காட்சிகள் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக படத்தில் வரும் ரத்தினவேலு என்ற வில்லன் கதாபாத்திரம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மாரி செல்வராஜ் என்னதான் இந்த படத்தை ஜாதி எதிர்ப்பு படமாக, சமூக நீதி படமாக எடுத்து இருந்தாலும்.. ஜாதி ரீதியிலான ஆட்கள் பலரும் இந்த படத்தில் வரும் பஹத் பாசிலின் ரத்தினவேலு கேரக்டரை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

கடந்த 3 நாட்களாக பஹத் பாசிலின் ரத்தினவேலு கேரக்டரை வைத்து பலரும் வீடியோ போட்டு வருகின்றனர். ஜாதி வெறிபிடித்த வில்லன் கேரக்டரில் பஹத் சிறப்பாக நடித்து இருந்ததால் ஜாதி ரீதியிலான ஆட்கள் பலரும் அவர் எங்கள் ஜாதிதான் என்று உரிமை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில்தான் படத்தின் புதிய காட்சி ஒன்றும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் காட்சியை குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர் செய்துள்ள போஸ்டில், மனைவியை வீட்டிலேயே பன்னி மேய்க்க வெச்சிட்டு பதவிக்கு போற மாமன்னன் எங்க...
வில்லனா இருந்தாலும் தன்னோட மனைவிய கஷ்டத்துல அரவணைச்சி, கோபத்துல போற தன்னைய ரூம்ல அடைக்குற அளவுக்கு உரிமை குடுத்து, கடைசியா அவளையே சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்த ரத்னவேல் எங்கே.. என்றைக்கும் பெண் அடிமையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் - ரத்னவேல் பாசறை, என்று கூறி போஸ்ட் செய்துள்ளார்.

அதாவது படத்தில் மாமன்னன் பாத்திரத்தில் வரும் வடிவேலு பாத்திரம் தனது மனைவியை வீட்டிலேயே வைத்துள்ளார். ஆனால் ரத்தினவேலு பாத்திரமோ தனது மனைவியை பெண்கள் தொகுதியில் நிற்க வைத்துள்ளார். அவரை வெற்றிபெறவும் வைத்துள்ளார் என்று பாராட்டி போஸ்ட் செய்துள்ளார்.
பதிலடி: இதற்கு நெட்டிசன் ஒருவர் அளித்துள்ள பதிலில், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் ஒரு ஆணால் கூட முன்னேற முடியவில்லை. உயர் ஜாதி என்பதால் ஒரு பெண் எளிதாக எம்எல்ஏ ஆக முடிகிறது. இதுதான் சிலருக்கு புரிய வேண்டியது என்று குறிப்பிட்டு உள்ளார். அதாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஆண் முன்னேறுவதே கஷ்டமானது, அப்படி இருக்க பெண் எப்படி முன்னேற முடியும் என்று கேட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் அளித்துள்ள பதிலில், கட்டின பொண்டாட்டி தோற்றாலும் பரவாயில்லை மாமன்னனை தோற்கடிக்கனும்னு சுற்றிட்டு இருந்துட்டு மாமன்னன் வெற்றி பெற்றதும் கையபுடிச்சிட்டு அந்த பெண் தன்னுடைய திறமையால் வெற்றி பெற்றதை தனதாக்கி கொள்ளும் ரத்னா குரூப், என்றும் நெட்டிசன் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். ரத்தினவேல் தனது மனைவியின் வெற்றிக்காக எந்த வேலையும் செய்வது இல்லை, ஆனால் வெற்றியில் மட்டும் அவரை கொண்டாடுகிறார் என்று விமர்சனம் வைத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications