சுழலும் "மய்ய" சக்கரம்.. கமல் காதுக்கு போன விஷயம்.. ரெடியாகும் திமுக.. அப்ப பிஜேபி? தகிக்கும் வியூகம்
சென்னை: திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்று தகவல்கள் வலுத்து வரும்நிலையில், மக்கள் நீதி மய்யம் குறித்த எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது.. அந்தவகையில், கமல் என்ன செய்ய போகிறார்? என்ற ஆர்வமும் வலம்வருகிறது.
சமீபநாட்களாகவே கமல்ஹாசனின் அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அத்துடன் திமுக கூட்டணியில் கமல் இணைய போவதாவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

திமுக கூட்டணி தற்சமயம் வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது..
கருணாநிதி: அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் திமுகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. அதன்படி, 1+1 சீட்களை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்வது அல்லது 2 மக்களவை தொகுதிகளை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்ய திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின..
அதாவது, பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே கமலையும் களமிறக்கலாம், அல்லது ராமநாதபுரம் தொகுதியை கமலுக்கு ஒதுக்க விரும்புவதாகவும் திமுக தரப்பில் செய்திகள் கசிந்தன. ஆனால், தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளையே பெற கமல் விருப்பம் காட்டுவதாகவும், இந்த தொகுதிகளில் ஒன்றில் கமலும், இன்னொரு தொகுதியில், கட்சியின் துணை தலைவர் மவுரியாவும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் மநீம தரப்பில் தகவல்கள் கசிந்தன..
இப்படி மாறி மாறி தகவல்கள் வட்டமடித்தாலும், எதுவும் இதுவரை உறுதியாக தெரியவில்லை.. காங்கிரஸூடன் காட்டிவரும் நெருக்கத்தை திமுகவுடன் கமல் காட்டவில்லை.. அதேசமயம், உரசல் போக்கையும் கொள்ளவில்லை.. கடந்த வருடம் தமிழக பட்ஜெட்டை விமர்சித்த கமல், இந்த முறை, பிடிஆரின் பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்..
பெருமிதம் கமல்: அத்துடன் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளும் மனதார வாழ்த்து கூறியிருந்தார். "ஒரு பெரிய தலைவருக்கு மகனாக இருப்பதில் சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும், சவால்களும் நிறைய உண்டு. சந்தோஷத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். இது அவரின் பொறுமையை மட்டுமல்ல, திறமையையும் காட்டுகிறது. தன் திறமையால் தன்னை நிரூபித்து இந்த நிலைக்கு வந்துள்ளார்" என்று பெருமிதம் பேசியிருந்தார் கமல். ஒருபடிமேலே சென்று, ஈரோடு இடைத்தேர்தலில், கலைஞர் கருணாநிதி குறித்தும் பேசியிருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது.
"விஸ்வரூபம் படம் வந்தபோது, என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். கலைஞர்தான் என்னை தொடர்பு கொண்டார். என்னிடம் உதவி வேண்டுமா என்று கேட்டார். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. இது தேசத்தின் பிரச்சனை இல்லை. அதனால் உதவி வேண்டாம் என்று கூறிவிட்டேன். இப்போதும் கூட உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா, நான் இருக்கிறேன் என்று ஸ்டாலின் சொன்னார்.. அரசியல் கடந்து நாம் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம் இது" என்று கமல் பேசியிருந்தது, திமுகவுடனான இணக்கத்தையே வெளிப்படுத்துவதாக இருந்தது.
திமுக + மநீம: அந்தவகையில், திமுகவுடன் கமல் நெருங்கி வரக்கூடும் என்றே அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறிவருகிறார்கள்.. ஆனால், மக்கள் நீதி மய்யத்தில் வேறு சில ஆலோசனைகள் நடப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் தருவதானால், மாற்று முடிவை எடுக்கலாம் என்று கமலுக்கு அக்கட்சி நிர்வாகிகள் நெருக்கடி தந்துவருகிறார்களாம். இதற்கு சில காரணங்களையும் இவர்கள் சொல்கிறார்கள்.
அதாவது, கடந்த 2019 தேர்தலில், 3.7 சதவீதம் மநீம பெற்றுள்ளது.. 2021 சட்டசபை தேர்தலில் 3.2 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது.. அப்படியானால், திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுகவை விட ஓட்டு சதவீதம் வைத்துள்ள மநீம கட்சிக்கு ஒரு தொகுதி என்பதை, எப்படி ஏற்க முடியும்? அதனால், மாற்று முடிவை எடுக்கலாம் என்று கமலிடம் எடுத்து சொல்லி வருகிறார்களாம்.
1+1 பார்முலா: தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார் போன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றுள்ளோம்.. அதனால், இந்த 4 தொகுதிகளில் ஒன்று, தெற்கு அல்லது கொங்கு மண்டலத்தில் ஒன்று என 2 தொகுதிகள் கிடைத்தால், திமுக கூட்டணியில் இணையலாம் என்றும் கமலிடம் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம்.. இதற்கெல்லாம் கமல் என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், 1 + 1 என்ற பார்முலாவுக்கு திமுகவுக்கு ஓகே சொல்லும் என்கிறார்கள்...
ராமநாதபுரம் தொகுதி: அதேபோல இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டேயிருப்பதால், திமுக கூட்டணி சார்பில் கமலை அங்கு நிறுத்தவும் யோசனை உள்ளதாம்.. காரணம், இந்துத்துவா ஆதரவு மண் என்று ராமநாதபுரத்தை முழுமையாக சொல்லிவிட முடியாது.. இங்கு பெருவாரியான முஸ்லிம்களின் வாக்குகளும் உள்ளன..
இந்த முஸ்லிம்களின் வாக்குகள், பாஜகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகளை அள்ளித்தரும் என்ற கேள்வியும் உள்ளது.. அதேசமயம், பாஜக அதிருப்தி ஓட்டுகளை, தன் சம்மட்டி அடி கேள்விகளாலும், பிரச்சாரங்களாலும், மக்கள் நீதி மய்யம் தன்பக்கம் இழுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. ஆனால், திமுக கூட்டணியில் கமல் இருக்கிறாரா? இல்லையா? என்பதே இன்னும் உறுதியாக தெரியாத சூழலில், இப்படி பல்வேறு யூகங்கள் தமிழக அரசியல் களத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.. கமல் என்ன முடிவெடுக்க போகிறார்? பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
இன்னொன்றையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே பாஜகவின் "பி டீம்" என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.. கட்சி ஆரம்பித்ததும், இந்த விமர்சனம் அதிகமாகி கொண்டே வருகிறதே தவிர, அது குறையவில்லை.. இந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்திலும் கமல் இருப்பதால்தான், ராகுலுடன் 'கை' கோர்ப்பதில் உறுதியாக உள்ளாராம்.. மேலும், கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, விஸ்வரூபம் பட விஷயத்தில் "அம்மையார்" பேச்சையெடுத்து, அதிமுகவையும் சீண்டிஉள்ளதால், திமுக - காங்கிரஸ் என்ற கூட்டணிக்குள், கமலும் நுழையக்கூடும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications