யார் அந்த சார்? அதிமுகவை தூக்கத்திலிருந்து எழுப்பிய வாசகம்.. உருவாக்கிய மாஸ்டர்மைண்ட் யார் தெரியுமா?
சென்னை: சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது... கடந்த 1 வாரமாக இந்த பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட அதிமுகவை இந்த பிரச்சாரம் தூக்கத்தில் இருந்து எழுப்பி உள்ளது. உறங்கிக்கிடந்த அதிமுக தொண்டர்கள் திமிறி எழுந்துள்ளனர். அதிமுகவை லைம் லைட்டிற்கு கொண்டு வந்த இந்த பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பது வேறு யாரும் இல்லை.. அது பிரஷாந்த் கிஷோர் என்று கூறப்படுகிறது.

அவர் தந்த ஐடியாவின் அடிப்படையிலேயே அதிமுகவின் இந்த போஸ்டர் பிரச்சாரம் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது. யார் அந்த Sir? என்ற போஸ்டர் கண்டிப்பாக மக்களிடம் சென்று சேரும் என்று அவர்தான் ஐடியா தந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு:
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்.. அந்த ஆள் தனியாக செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார்.
இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சார் யார்... அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக ஆலோசனை:
அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.

அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். தற்போது அதே பிரஷாந்த் கிஷோருடன் எடப்பாடி கைகோர்க்க உள்ளாராம்.












Click it and Unblock the Notifications