அமித்ஷா அசத்திட்டாரே.. பாஜகவும் கண்டுக்கல! எல்லாமே விஜயகாந்த்துக்காகத்தான்.. மலைத்த பிரேமலதா.. வாவ்
சென்னை: விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்ட விருதினால், தேமுதிகவினர் பெருத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்..!!
விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.. அதன்படி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற விழாவில், விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது தரப்படவில்லை.

தேமுதிக: இது தேமுதிகவினருக்கு ஏமாற்றத்தை தந்தது.. ஆனால், விரைவில் விஜயகாந்த்துக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருந்தது,
இதையடுத்து 2வது கட்டமாக நேற்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.. இந்த விருதை ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
கண்கலங்கினார்: திரெளபதி முர்முவிடமிருந்து இந்த விருதை பெற்றதுமே, பிரேமலதா உணர்ச்சிவசப்பட்டார்.. கண்கலங்கி மேல்நோக்க பார்த்தார்.. பிரேமலதா இந்த விருதை வாங்கியபோது, அவரது மகன்கள் இருவருமே உணர்ச்சிப்பெருக்கில் கைகளை தட்டினார்கள்..
பிரேமலதா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, கேப்டன் இல்லை என்பதே பெரிய மனவலியாக இருக்கிறது.. ஆனாலும் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது வாங்குவதில் தேமுதிக பெருமை கொள்கிறது.. கேப்டன் நம்முடன் இல்லாவிட்டாலும் கூட இந்த விருதை நேரடியாக அவருக்கு சமர்ப்பிக்கிறோம்" என்றார்.
அமித்ஷா: அதுமட்டுமல்ல, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இரவு விருந்துக்கான அழைப்பு வந்திருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்லாது பத்ம விருதுகள் வாங்கிய எல்லாருக்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.. இந்த விருந்து நிகழ்ச்சியில் நாங்களும் கலந்து கொள்ள போகிறோம்.
நாளை (இன்று) டெல்லியில் இருக்கும் தமிழ் சங்கம் சார்பாக கேப்டனுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடக்கவிருக்கிறது.. இந்த பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டு அதன்பிறகு சென்னை திரும்புகிறோம்.. சென்னை திரும்பியது பேரணியாக திரண்டு கேப்டனின் கோவிலில் இந்த விருதை அவரது காலடியில் வைத்து அவர்களுக்கான மரியாதை செலுத்த இருக்கிறோம்" உருக்கமாக சொன்னார் பிரேமலதா.
தேமுதிக: தேமுதிகவை பொறுத்தவரை, பாஜகவுடன் நெருக்கமாகவே பயணித்து வந்தது.. கூட்டணியில் இருந்தபோதும்சரி, இல்லாதபோதும்சரி, பாஜகவை விமர்சித்ததே கிடையாது.. அதேசமயம், திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது தேமுதிகவுக்கு வழக்கமான ஒன்று. ஆனால், நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில், திமுகவுடன் பாஜகவையும் சேர்த்தே விமர்சித்தார் பிரேமலதா.
அதிலும் கோவை பிரச்சாரத்தில், பிரதமர் மோடி ஆட்சியில்தான் கோவையில் மில்கள் மூடப்பட்டன.. மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பிறகுதான் மில்கள் மூடப்பட்டன.. மோடி ஆட்சியில்தான், 300 சதவீத மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன" என்றெல்லாம் கடுமையாக பேசியிருந்தார்.
நெகிழ்ச்சி: அவ்வளவு ஏன்? விஜயகாந்த்துக்கு விருது அறிவிக்கப்பட்டபோதுகூட, "இது காலம்கடந்த அறிவிப்பு" என்றுதான் பிரேமலதா கூறியிருந்தார்..
எனினும், தேமுதிகவின் பொருமல்கள் எதையுமே பாஜக காதில் போட்டுக் கொள்ளவில்லை.. பதிலுக்கு தேமுதிகவை எந்த இடத்திலும் விமர்சிக்கவுமில்லை. ஏற்கனவே சொன்னபடியே விஜயகாந்த்துக்கான விருதை வழங்கிவிட்டது. அதுவும் இல்லாமல், பிரேமலதா உட்பட விருது வாங்கியவர்களுக்கு அமித்ஷா வீட்டிலேயே விருந்தும் தரப்பட்டுள்ளதாம்.
மகிழ்ச்சி: விருதும் - விருந்தும் பெற்ற நெகிழ்ச்சியில் கரைந்து கொண்டிருக்கிறார் பிரேமலதா.. இது தேமுதிகவினருக்கும் பெருத்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது...!!
விருதாளர்கள்: முன்னதாக, நேற்றிரவு பத்ம விருதுகளை வென்ற விருதாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவு விருந்து வழங்கி மகிழ்வித்தார்... டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும்விழா முடிந்ததுமே, தன்னுடைய இல்லத்தில் அமித்ஷா இந்த விருந்தினை தந்தார்..
இதில் பத்ம விபூஷன் விருது வென்ற வைஜெய்ந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் மற்றும் பத்ம பூஷன் விருது வென்ற விஜயகாந்த் சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரேமலதா, சுதீஷ், மகன்கள் இருவருமே உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications