கிருஷ்ணசாமி சொல்லிட்டாரு.. "திமுக வீழப்போகுது.. திராவிடம் ஒழியப்போகுது.. மிரண்ட ஸ்ரீவில்லிப்புத்தூர்
சென்னை: திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு, புதிய தமிழகம் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. அத்துடன், திமுக மீதான கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"சனாதனம் குறித்து பேசி திமுக மீதுள்ள அதிருப்தியை திசைத்திருப்ப முயலும் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
உதயநிதி பேச்சு: இதனிடையே, உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்ற உத்தரபிரதேச சாமியார் விவகாரமும் வெடித்து கிளம்பி உள்ளது. மற்றொருபக்கம், உதயநிதி ஸ்டாலின் மீது சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இன்னொருபக்கம் டெல்லி தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு கடிதத்தையும் அனுப்பியிருக்கிறார்கள். இப்படி நாலாபக்கமும் எதிர்ப்புகள் பதிவாகி வரும்சூழலில், பாஜக தொடர்ந்து உதயநிதி மீதான கண்டனத்தை பதிவு செய்தவாறே உள்ளது. இந்நிலையில், டாக்டர் கிருஷ்ணசாமியும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை கூட்டம் நடந்தது. இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.. அப்போது அவர் பேசியதாவது:
திராவிடம்: "40 நாட்களைக் கடந்த நிலையில் திராவிடம் வீழ்ந்து, தமிழகம் எழுந்து நிற்கும் சூழல் உருவாகிவிட்டது. இனிமேல் தமிழகத்தில் திராவிடம் எழுந்திருக்க வாய்ப்பேயில்லை.. ஊழலற்ற, மதுவற்ற தமிழகம் இனி உருவாகும்.
நாங்கள் ஊழலை ஒழிப்போம் என்று பேசினால் திமுக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறது. மூதாதையரின் வழிபாடு தான் சனாதன தர்மம். தன்னுடைய தந்தையின், மூதாதையர்களின் வழிபாட்டை ஒழிக்க ஸ்டாலினால் முடியுமா? கருணாநிதியும், ஸ்டாலினும் இந்துவாக இல்லாமல் இருந்தால் தமிழகத்தில் முதல்வராகி இருக்க முடியுமா? மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு, அடியை வெட்டுவது போல் செயல்படுகிறார்கள்.
வீழப்போகிறது: இந்து மதம் ஒன்றுதான் கடவுள் இருக்கிறது என்று சொல்லவும், அதேசமயம், கடவுள் இல்லை என்று சொல்லவும் இடமளிக்கிறது. அதன்பெயர்தான் சனாதனம்.. அதனை ஒழிப்போம் என்று சொல்வதன் மூலம், திமுகதான் வீழப்போகிறது.. திராவிடம்தான் ஒழியப்போகிறது" என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications