வில்லி வில்லிவாக்கம்.. சென்னை "தேவதை"யின் எதிர்வீட்டு கள்ளக்காதல்.. அசிங்கமாக சிக்கிய சரத்குமார்
சென்னை: நண்பனின் கள்ளக்காதலுக்காக, கணவனை கார் ஏற்றி கொன்றுள்ளார் சரத்குமார் என்ற நபர்.. இவரைதான் 2 நாட்களாகவே போலீசார் தேடி கொண்டிருந்தார்கள்.. தற்போது கைதாகி உள்ளார் சரத்குமார்.
கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே கார் ஏற்றி கொன்ற வழக்கில், கடனை அடைக்க உதவுவதாக கூறியதால் தீர்த்துக்கட்டினேன் என்று, தலைமறைவாக இருந்த கார் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை: சென்னை அயனாவரத்தை சேர்ந்த இரும்பு கடை வியாபாரி பிரேம்குமார். கடந்த 2ம் தேதி நள்ளிரவில் இவரை கார் ஏற்றி கொன்றுவிட்டனர்.. இதனால், அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
அப்போதுதான், பிரேம்குமாரின் மனைவி சன்பிரியா என்பவருக்கும், ஹரி கிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.. தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் பிரேம்குமார் தடையாக இருப்பதாக நினைத்து, இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு உதவியது, சரத்குமார் என்ற நண்பர் ஆவார்.. இவர்தான் பிரேம்குமார் மீது காரை ஏற்றி கொன்றவர்.. ஆனால், இது விபத்து போல தெரிய வேண்டும் என்பதற்காகவும், தன் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நிறைய மாஸ்டர் பிளான்களை சரத்குமார் போட்டிருக்கிறார்.
ஆந்திரா: இதற்காகவே, ஆந்திராவில் இருந்து கிளம்பி வந்துள்ளார் சரத்குமார்.. ஓஎல்எக்ஸ் வெப்சைட்டில் பழைய கார் ஒன்றையும் புக் செய்திருக்கிறார்.. அந்த காரை நேரில் சென்று வாங்கும்போது, சரத்குமார் தலையில் விக் வைத்துக்கொண்டு போனாராம்.. மேலும், கால் உடைந்தது போல, கட்டு போட்டுக் கொண்டாராம்.. கையில் ஒரு குச்சியை வைத்து தாங்கி தாங்கி நடந்து போனாராம்.
இதெல்லாம் எதற்காகவென்றால், ஒருவேளை, கார் ஏற்றி கொன்றதை போலீஸ் கண்டுபிடித்துவிட்டாலோ அல்லது அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் முகம் பதிந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே, தன்னுடைய மொத்த அடையாளத்தையும் சரத்குமார் மறைத்து கொண்டுள்ளார். ஓஎல்எக்ஸ்-ஐ அணுகி போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவும் இப்படி மாறுவேடம் போட்டு சென்றாராம் சரத்குமார். இந்த பிளானையெல்லாம் கேட்டு போலீசார் அரண்டு போய் விட்டார்கள்.
விசாரணை: பிறகு, கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த போலீசார், சரத்குமாரையும் கடந்த 2 நாட்களாகவே தீவிரமாக தேடி வந்தநிலையில், நேற்றைய தினம் அவரையும் கோயம்புத்தூரில் கைது செய்துவிட்டார்கள். பிறகு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சரத்குமார் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு, அதற்கு மேல் வாயடைத்து போய்விட்டனர் போலீசார்.
ஹரிகிருஷ்ணன், சரத்குமார் ஆகிய இருவருமே நண்பர்களாம்.. இருவருக்கும் அயனாவரம் பகுதியில் கிரிக்கெட் விளையாடும்போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. கடந்த 3 மாதத்திற்கு முன்பு 2 நண்பர்களும் தண்ணி அடித்து கொண்டிருந்தார்களாம். அப்போது சரத்குமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், நிரந்தரமாக வேலை இல்லை, கடன் பிரச்சனையும் இருப்பதாக ஹரிகிருஷ்ணனிடம் சொன்னாராம்.
சரத்குமார்: அப்போது ஹரிகிருஷ்ணன், தன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தை சொல்லி, பிரேம்குமாரை கொலை செய்தால், கேட்ட பணத்தை தருவதாக சொன்னாராம். முதலில் இதற்கு மறுத்துள்ளார் சரத்குமார். பிறகு, வேறுவழியின்றி கொலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை செய்ய மொத்தம் 6 லட்சம் விலை பேசப்பட்டுள்ளது.. முதற்கட்டமாக ஹரிகிருஷ்ணன் சரத்குமாருக்கு ரூ.1.50 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் அனுப்பியிருக்கிறார்.. இந்த பணத்தை பார்த்துமே சரத்குமார், கொலை செய்ய முழு சம்மதம் சொல்லி உள்ளார். கடந்த 3 மாதமாகவே பிரேம்குமாரை கொலை செய்ய பல்வேறு திட்டங்களை 2 நண்பர்களும் தீட்டியிருக்கிறார்கள். ஆனால் போலீசில் மாட்டி விடுவோம் என பயந்து ஒவ்வொரு திட்டத்தையும் கைவிட்டு வந்துள்ளனர்.
சிசிடிவி காட்சி: இறுதியாகத்தான், கார் ஏற்றி கொல்வது என முடிவாகி உள்ளது. விபத்து போலவே சித்தரிப்பதற்காக சிசிடிவி இல்லாத இடமாக நோட்டமிட்டு, அதற்கு பிறகு பிரேம்குமாரை காரை ஏற்றி கொன்றாராம். இதெல்லாம் சரத்குமார் வாக்குமூலத்தில் சொல்லி உள்ளார். அதேபோல கைதான கள்ளக்காதல் ஜோடியிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கள்ளக்காதல் விவகாரத்தை பொறுத்தவரை, ஹரிகிருஷ்ணனை மயக்கி தன் ஆசை வலையில் வீழ்த்தியதே சன்பிரியாதானாம்.. சன்பிரியாவின் எதிர்வீட்டில்தான் ஹரிகிருஷ்ணன் ஆரம்பத்தில் குடியிருந்து வந்துள்ளார்.. சன்பிரியா இயல்பாகவே வசதியான வீட்டுப் பெண்ணாம்.. ஹரிகிருஷ்ணன் தங்கைக்கு கல்யாணம் செய்தபோது, எதிர்வீட்டு நண்பர் என்ற முறையில் சன்பிரியா பண உதவி செய்திருக்கிறார்.
சன்பிரியா: பதிலுக்கு ஹரிகிருஷ்ணனும், பரிசு பொருட்களை சன்பிரியாவுக்கு வாங்கி தந்துள்ளார். பிறகு வாட்ஸ்அப்பில் இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.. அப்போதுதான் ஹரிகிருஷ்ணனை விரும்புவதாக சன்பிரியா சொன்னாராம்.
கணவர் பிரேம்குமார், வீடு வாங்குவதற்காக சுமார் 68 லட்ச ரூபாயும், 200 சவரன் நகைகளும் தனக்கு தந்திருப்பதாகவும், அந்த பணம், நகைகளோடு வீட்டைவிட்டு வந்துவிடுவதாகவும், எங்காவது போய் சந்தோஷமாக வாழலாம் என்றும் ஹரிகிருஷ்ணனிடம், சன்பிரியா சொல்லி உள்ளார்.. இந்த கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே கொலை செய்ய வேண்டும் என்றாராம் சன்பிரியா. கணவர் இறந்த அடுத்த ஒரு வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தார்களாம்.
வாக்குமூலம்: அதுமட்டுமல்ல, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில்வைத்து ஹரிகிருஷ்ணன், சன் பிரியா ஆகியோரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தியபோது ஹரிகிருஷ்ணனுக்கு உணவு வழங்கப்பட்டது. சாப்பாடு வேண்டாம் என்று சொன்ன ஹரிகிருஷ்ணன், சன் பிரியா சாப்பிடாம நான் எப்படி சாப்பிட முடியும்? என்று கேட்டாராம்.
ஹரிகிருஷ்ணன் தன்னுடைய தனது வலது பக்க கழுத்து மேல்பகுதியில் காது ஓரத்தில், எச்.எஸ்.பி என்று டாட்டூ குத்தியிருக்கிறார்.. H என்றால் ஹரிகிருஷ்ணன். SP என்றால் சன் பிரியா என்று இதற்கு விளக்கமும் அளித்துள்ளார் ஹரிகிருஷ்ணன்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications